'நம் மதம் நமது உடல்' 'நம் ஆலயம் நமது உயிர் இந்துக்கள் சமயத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்! செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் புத்தாண்டு வாழ்த்து

'நம் மதம் நமது உடல்'
'நம் ஆலயம் நமது உயிர்
இந்துக்கள் சமயத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்!
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் புத்தாண்டு வாழ்த்து

கிள்ளான், டிச.31- 
          இந்துக்கள் சமயத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் .

 'நம் மதம் நமது உடல், நம் ஆலயம் நமது உயிர்' என்ற  அடிப்படையில் இந்துக்கள் சமயத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். நாம் ஆலயங்களுக்கு அரணாக இருக்க வேண்டும். இதனை நமது ஆலய வழிபாட்டின் மூலமே  உறுதி செய்ய முடியும் என்பதால் இந்துக்கள் அனைவரும் சமயத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று குணராஜ் தெரிவித்தார்.

இந்த புத்தாண்டில் நாம் அனைவரும் ஒற்றுமையாக  ஆலய வழிபாட்டிற்கு சென்று வழிபட்டு ஒரு மகிழ்ச்சியான புத்தாண்டைக் கொண்டாட வேண்டும்.  இந்த மகிழ்ச்சியான நாளில் சமய வழிபாட்டிற்குப்  அனைவரும் முக்கியத்துவம் வேண்டும். இந்த பரபரப்பான நவீன சூழலில் பலர் ஆலய வழிபாட்டை மறந்து விடுகிறார்கள். "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று அப்போதே சொல்லி வைத்து விட்டார்கள்.

நாம் இந்துக்கள். நம் இந்து மதத்தை நாம்தான் கவசமாக பாதுகாக்க வேண்டும். ஆலயமும் அப்படித்தான். நாம்தான் அதற்கு கவசம். இறைவன் நமக்கு அருள்தந்து கவசமாக இருக்கிறார். நாம் ஆலயத்திற்கு அடிக்கடி செல்வதை வழக்கமாகக் கொண்டு ஆலயத்திற்கும் ஆலயத்தில் இருக்கும் இறைவனுக்கும் கவசமாக இருப்போம். இந்த புத்தாண்டு சமயத்தில் மட்டும் ஆலய வழிபாட்டிற்கு செல்லாமல் முடிந்தவரை செவ்வாய், வெள்ளி மற்றும் விஷேச நாட்களில் ஆலய செல்லுங்கள்.

இந்த புத்தாண்டு நாளில் இதனையே நாம் அனைவரும் லட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குணராஜ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்ட மாண்புமிகு குணராஜ் மலேசியா வாழ் இந்துக்கள் அனைவருக்கும் தமது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments