கல்வியில் பின்தங்கிய இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது ஐடிசி இந்திய உருமாற்ற கல்வி மையம்! வகுப்பில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

கல்வியில் பின்தங்கிய இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது ஐடிசி இந்திய உருமாற்ற கல்வி மையம்!
வகுப்பில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

கோலாலம்பூர், டிச.30- 
      கல்வியில் பின் தங்கிய இந்திய மாணவர்களை கரை சேர்க்கும் முயற்சியில் சமூக சேவையாளர் சோலமன் தலைமையிலான இந்தியர் உருமாற்ற மையம் செயல்பட்டு வருகிறது.


ஐடிசி எனப்படும் இந்த இந்தியர் உருமாற்ற மையமானது தரமான பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு கல்வியில் பின்தங்கிய பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களை முன்னேடுத்துச் செல்ல தொடங்கப்பட்டுள்ள ஒரு கல்வி மையமாகும்.


இந்த ஐடிசி மையம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பட்டதாரியான சோலமன் சந்தியாகோ  ஐந்து பட்டதாரிகளால் உருவாகப்பட்ட ஒரு கல்வி மையமாகும். இதன் நோக்கம் நடுத்தர வசதி கொண்ட கல்வியில் பின்தங்கிய  மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதாகும். கடந்த 5 ஆண்டுகளில் இந்திய மாணவர்கள் பலர் திறன்மிக்க மாணவர்களாக உருவாக்க ஐடிசி பாடுபட்டு வந்துள்ளது.இந்த இந்தியர் உருமாற்ற மையம் ஐடிசி செர்டாங்கில் தொடங்கி ஐடிசி பூச்சோங், ஐடிசி காஜாங், ஐடிசி பெட்டாலிங் உத்தாமா வரை விரிவுபடுத்தப்பட்டு தற்போது ஜாலான் ஈப்போ, காசிபிள்ளையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் வகுப்புகள் ஜனவரி பள்ளி தவணை தொடங்கியவுடன் செந்தூல் தம்புசாமி தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

இதில் கெப்போங், செந்தூல், பத்துகேவ்ஸ், கோலாலம்பூர் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் இந்த வகுப்புகளில் பங்கேற்கலாம்.   
           இந்த வகுப்புக்கள் தரமான பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இங்கு தற்போது மாணவர் பதிவு நடைபெற்று வருகிறது. முதலாம் வகுப்பு தொடங்கி ஐந்தாம் படிவ மாணவர்கள் வரையிலான மாணவர்கள் கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
MR.SOLOMAN - 012-312 7274, ANITHA - 010- 246 3117

Comments