மலேசிய இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மிண்ரா விருது விழா!

மலேசிய இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மிண்ரா விருது விழா!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், டிச. 5-
          மலேசிய இசைக் கலைஞர்கள் தரமான ஆல்பம் படைப்புகளை வெளியிட வேண்டும் எனும்

நோக்கத்தில்  ஊக்குவிக்கும் நோக்கத்தில் முதல் முறையாக மலேசிய இந்திய இசைக் கலைஞர்கள்

ஒலிப்பதிவு சங்கம் (MALAYSIAN INDIAN RECORDING ARTIST ASSOCIATION) மிண்ரா விருது விழா 2018ஐ நடத்தப்படவிருப்பதாக அதன் தலைவர் எம்.சிவா கூறினார்.
           மலேசியாவில் இசைத்துறை சார்ந்த கலைஞர்களை குறிப்பாக பாடகர்கள், பாடகிகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், ஆல்பம் அட்டை வடிவமைப்பாளர்கள், சவுண்ட் இஞ்ஜினியர் உள்ளிட்ட மேலும் பல கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் விருது வழங்கப்பட வேண்டும் எனும் பரிந்துரையை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவிடம் முன் வைத்தோம்.


இத்தகைய  விருது விழா கடந்த 5 ஆண்டுகளில் யாரும்  நடத்தவில்லை என்பதை அமைச்சரிடம் எடுத்து கூறினோம். கோபிந்த் இதற்கு இசைவு தந்ததன்  விளைவாக மிண்ரா விருது விழா நடத்தப்படுவதாக எம்.சிவா தெரிவித்தார்.        இந்த மிண்ரா விருது விழா டிசம்பர் 8 சனிக்கிழமை கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் ஆசியா பசிபிக் பல்கலைக்கழக மண்டபத்தில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, தொழிலதிபர் ரத்னவள்ளி  அம்மையார் தலைமையில் மாலை 6.00 மணி தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு ஆதரவாளர்களாக இருக்கும் எஸ்கே, கிரிண்ட் ஓஷேன் லெப், நிறுவனத்தின்  ஆதரவாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
         இந்த விருதுக்கான வேட்பாளர்கள் ஏற்கெனவே இணையம் தங்கள் படைப்புகளை நீதிபதிகளிடம் வழங்கி விட்டனர். நீதிபதிகள் அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள். இதில் சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த ஆல்பம், சிறந்த இசை, சிறந்த முகப்பு வடிவமைப்பு என்று  மொத்தம் 15 விருதுகள் வழங்கப்பட உள்ளன.   
        இந்த விருது விழாவின் பிரதான ஆதரவாளர். மேலும் ஆதரவு வழங்கியுள்ளனர். இதில் தேசம் வலைத்தளம் ஊடக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
       இந்த விருது விழா இலவசமாக நடைபெறுவதால் கலைஞர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் கலந்து கொள்ளலாம்.  அனைவில் அழைப்பு அட்டைகளை பெற்று கலந்து கொள்ளும்படி எம்.சிவா கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்புக்கு- 012-376 7220

Comments