பினாங்கு மாநில ம.இ.கா, டத்தோ ஞானசேகரன் தலைமையில் வலுப்பெறும்! பத்து கவான் தொகுதி தலைவர் சூ.இராமலிங்கம் சூளுரை.

பினாங்கு மாநில ம.இ.கா,  டத்தோ ஞானசேகரன் தலைமையில் வலுப்பெறும்!
பத்து கவான் தொகுதி தலைவர் சூ.இராமலிங்கம் சூளுரை.

மு.வ.கலைமணி

பத்து கவான், டிச.6-
          பினாங்கு மாநில ம.இ.கா தொடர்பு குழுத் தலைவராக டத்தோ மு.ஞானசேகரன் நியமிக்கப்படுள்ளது தொடர்பாக தாம் மகிழ்ச்சியடைவதாக பத்து கவான் தொகுதி ம.இ.கா தலைவர் சூ.இராமலிங்கம் கூறினார்.


       ஆளும் கட்சியான நம்பிக்கை கூட்டணிக்கு பலத்த  போட்டி கொடுக்கும் ம.இ.கா தலைவராக அவர் திகழ்வார்  என்று  இராமலிங்கம் நம்பிக்கை தெரிவித்தார்.


       பினாங்கு மாநிலத்தில் நிகழும் பல அரசியல் மோசடிகளை தட்டிக் கேட்கக்கூடிய ஒரே தலைவராக அவர் திகழ்கிறார். அவருக்கு தோள் கொடுத்து
துணை நிற்க புதிய செயலவையினரான  நாங்கள்  தயாராக இருக்கிறோம் என  அவர் சூளுரைத்தார்.
      ம.இ.கா பத்து கவான் தொகுதியின் ஏற்பாட்டில் நடந்தேறிய தீபாவளி ஒன்று கூடும் விருந்துபசரிப்பில்  சிறப்பு அழைப்பாளர்களான  மாநில தொடர்புக் குழு தலைவர் டத்தோ மு.ஞானசேகரன், துணைத் தலைவர் பி.எஸ்.மணியம், செயலாளர் ஜி.இளங்கோ, பொருளாளர் பி.ஆறுமுகம், மற்றும் தொகுதித் தலைவர்களான டத்தோ கெ. முருகையா, எல்லப்பன்,  மாரிமுத்து ஆகியோர்கள் கலந்துக் கொண்டதோடு கௌரவிப்புகளை ஏற்றுக் கொண்டனர்.
       புதிய மாநில தலைவராக டத்தோ மு.ஞானசேகரன் அவர்கள் நியமிக்கப்பட்டதையொடியும் அவரின் பிறந்த நாளையொட்டியும் இந்த விருந்தோம்பல் தொகுதியிலுள்ள கிளைத் தலைவர்களின் ஆதரவில் ஏற்பாடு செய்ததாக அவர் மேலும் சொன்னார்.
            இந்நிகழ்வில் ஏற்புரை வழங்கிய மாநில தொடர்புக் குழுத் தலைவரான டத்தோ மு.ஞானசேகரன் தமதுரையில், மாநில ம.இ.காவில் பொறுப்பேற்ற எங்களுக்கு  முதன் முதலாக பாராட்டு விருந்துபசரிப்பு நடத்தி வாழ்த்துக் கூறும் நல்லெண்ணம் கொண்ட தொகுதியாக பத்து கவான் தொகுதி இடம்பெறுகிறது. தொகுதித் தலைவர் இராமலிங்கம்  துணைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு பாராட்டுகள் தெரிவித்த  அவர்,
விருந்து ஏற்பாட்டுக்குழுவினர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக  மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Comments