வாழை இலை உணவளித்து தீபாவளி விருந்துபசரிப்பு நடத்திய பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன்

வாழை இலை உணவளித்து தீபாவளி விருந்துபசரிப்பு நடத்திய பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன்

குணாளன் மணியம்
படங்கள்: ஹரிஸ்ரீநிவாஸ் குணாளன்

கோலாலம்பூர், டிச. 16-
          தமிழர்களின் பாரம்பரியம், கலை, கலாச்சார, பண்பாடு ஆகியவை தமிழர்களால் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வரும் வேளையில் நமது தமிழ் கலாச்சாரத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் வாழை இலை உணவளித்து தீபாவளி விருந்துபசரிப்பு நடத்தியுள்ளார்   உலகின் தற்போதைய இளம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன்.         அதுமட்டுமல்லாமல் பாரம்பரிய நடனம், சிலம்பம், கம்பு சுற்றுதல் என்று தமிழ் பாரம்பரிய கலைகளையும் இணைத்து பலரது பாராட்டைப் பெற்றுள்ளார் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன்.


      இந்த இளம் வயதில் நல்ல முதிர்ச்சிப் பெற்றுள்ள 24 வயது இளைஞர் பிரபாகரன் தேர்தலில் போட்டியிட்டு இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.


நாட்டின் இளம்  நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்  பிரபாகரன் மனுஉறுதியோடு செயல்பட்டதால்தான் இவை அனைத்தும் சாத்தியப்பட்டன.
          நமது தமிழர் பாரம்பரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்ததால்தான் வாழை இலை உணவளித்து  தீபாவளி வி்ருந்துபசரிப்பை நடத்தியுள்ளார் பிரபாகரன்.
          தீபாவளி முடிந்து  ஒரு மாதகாலத்திற்கு மேலாகிவிட்டாலும்கூட  மக்களுக்கு  பாரம்பரிய விருந்துபசரிப்பு  நடத்த வேண்டும் என்று நினைத்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் மக்களுக்கு வாழை இலை விருந்து படைத்து மகிழ்வித்துள்ளார்.
         பத்து நாடாளுமன்றத் தொகுதியின் இந்த தீபாவளி உபசரிப்பு டிசம்பர் 15 சனிக்கிழமை ஆடல், பாடல் என்று பாரம்பரிய நடனங்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
         இதில் கலந்து கொண்ட மக்களுக்கு தமது கரங்களால் வாழை இலை உணவு பரிமாறினார் பிரபாகரன்.
       இந்த தீபாவளி உபசரிப்பில் சிலம்பாட்டம், கம்பு சுற்றுதல் உள்ளிட்ட பல பாரம்பரிய தற்காப்புக் கலைகளும் இடம்பெற்றன. இதில் ஆதரவற்ற இல்லத்தை சேர்ந்த பிள்ளைகள், வசதி குறைந்த மக்கள் ஆகியோருக்கு  உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. பிரபாகரன் அதனை எடுத்து வழங்கினார்.
         கூட்டரசு பிரதேச அமைச்சரின் பிரதிநிதி கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்து தொகுதி மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments