இளைஞர்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்குவோம்! உலுசிலாங்கூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஸ்ரீ விக்னேஷ்வரன் புத்தாண்டு வாழ்த்து

இளைஞர்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்குவோம்!
உலுசிலாங்கூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஸ்ரீ விக்னேஷ்வரன்  புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், ஜன.1-
           இளைஞர்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்குவதோடு அவர்களின் முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று உலுசிலாங்கூர் ஊராட்சிமன்ற உறுப்பினர் திருவாளர் ஸ்ரீ விக்னேஷ்வரன்  புத்தாண்டு வாழ்த்து கேட்டுக் கொண்டுள்ளார்.

இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டல் இல்லாத காரணத்தினால் அவர்கள் தவறான பாதையில் செல்கின்றனர். இவர்களுக்கு முறையான வழிகாட்டலாக நாம் இருக்க வேண்டும்.

நாட்டின் வருங்கால தூண்கள் இளைஞர்கள். இவர்களை அரவணைக்க வேண்டியது நமது கடமை. கல்வி படிப்பை கைவிட்ட இளைஞர்கள்தான் ஒருவழிகாட்டல் இல்லாமல் தவிக்கின்றனர். இத்தகைய இளைஞர்களை நாம் சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்த புத்தாண்டில் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டலாக மக்களும் அரசியல் தலைவர்களும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட சிலாங்கூர் மாநில ஜசெக இளைஞர்  தகவல் பிரிவு தலைவரும் உலுசிலாங்கூர் ஜசெக இளைஞர் பிரிவு தலைவருமான விக்னேஷ்வரன் இந்து பெருமக்கள் அனைவருக்கும் தமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments