மலேசிய இந்து சங்கத்தை காக்க புறப்பட்டிருக்கும் தர்ம யுத்தம் அணியை வெற்றி பெறச் செய்வோம்! வாக்காளர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை

மலேசிய இந்து  சங்கத்தை காக்க  புறப்பட்டிருக்கும் தர்ம யுத்தம்  அணியை வெற்றி பெறச் செய்வோம்!
வாக்காளர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை 

குணாளன் மணியம்

கோலாலம்பூர், டிச.15-
          மலேசிய இந்து சங்கத்தை காக்க  தலைமைத்துவ மாற்றத்தை ஏற்படுத்தப் புறப்பட்டிருக்கும் தர்மயுத்தம் அணியை வாக்காளர்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.


           இந்து சங்கத்தின் நடப்புத் தலைவர் டத்தோ மோகன் ஷாண் தலைமைத்துவத்தில் சங்கம் அடைந்துள்ள வீழ்ச்சியை வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்துக்கள், ஆலயங்கள், மதமாற்று விவகாரங்கள், இளைஞர் சீரழிவு, சமய போதனை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய டத்தோ மோகன் ஷாண் தலைமைத்துவம் அதனை செய்யத் தவறி விட்டது.


ஆகையால் மேற்கூறப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்ற கண்டிப்பாக புதிய தலைமைத்துவம் வேண்டும் என்று  பொதுமக்கள் பலர்  கருத்து தெரிவித்தனர்.
       இந்நாட்டில் 60 ஆண்டு அரசாங்கத்தையே மாற்றம் செய்துள்ள மக்கள்,  மலேசிய இந்து சங்கத்திலும் தலைமைத்துவ மாற்றம் நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.  சங்கத்தில் மாற்றம் இருந்தால் மட்டுமே பல மேம்பாடுகளைக் கொண்டு வர முடியும்.  டத்தோ மோகன் ஷாண் தலைமைத்துவம் மிகவும் பலவீனமான  தலைமைத்துவம். இவர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்து சங்கத்தை வழி நடத்தவும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்றவும் பொருத்தமான அணியாகத் திகழும் தர்மயுத்தம் அணியை வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கருத்துரைத்தனர்.
       இந்து சமயத்தை ஒவ்வொரு இந்துவின் நாடி நரம்புகளைத் தட்டி எழுப்பும் சங்கமாக மலேசிய இந்து சங்கம் இருக்க வேண்டும். ஆனால், டத்தோ மோகன் ஷாண் தலைமையிலான மலேசிய இந்து சங்கம் தன் கடமையை நிறைவேற்றத் தவறி விட்டது. இந்து சமயத்தை கட்டிக் காக்க வேண்டிய சங்கம் அதனை செய்யாமல் திசை மாறிச் சென்று   கொண்டிருக்கிறது.  ஆலயப் பிரச்சினைகள்,
 இந்துக்கள் மதமாற்றம்,  உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேவையில்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷாணின் தலைமைத்துவத்தை வாக்காளர்கள்  நிராகரிக்க வேண்டும் என்று சங்கத்தின் மீது பற்று கொண்டுள்ள பொதுமக்கள் வலியுறுதரதினர்.
        சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரத்தில் டத்தோ மோகன் ஷாண் முறையான நடவடிக்கை யை கையாளவில்லை. மாறாக ஆலயத்தை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கு ஆதரித்து கடிதம் வழங்கியிருக்கிறார். இதனால் சீபீல்ட் ஆலயப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை. டத்தோ மோகன் ஷாண் நினைத்திருந்தால் சீபீல்ட் ஆலயப் பிரச்சினைக்கு பேச்சு நடத்தி தீர்வு கண்டிருக்கலாம். இப்படி மலேசிய இந்து சங்கம் தன் கடமைகளை நிறைவேற்றாமல் அதன் உண்மையான இலக்கை திசை மாற்றிக் கொண்டுச் சென்ற டத்தோ மோகன் ஷாண் தலைமைத்துவம் நிராகரிக்கப்பட்டு புதிய தலைமைத்துவம் சங்கத்தை வழிநடத்த வேண்டும். ஆகையால், மலேசிய இந்து சங்கத்தின் தேர்தலில் டத்தோ மோகன் ஷாணை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சூளுரைத்தனர்.

Comments