பிறக்கும் புத்தாண்டு புதிய சிந்தனையையும், புதிய எழுச்சியையும் உண்டாக்கட்டும்! செனட்டர் டத்தோ டி.மோகன் புத்தாண்டு வாழ்த்து

பிறக்கும் புத்தாண்டு  புதிய சிந்தனையையும், புதிய எழுச்சியையும்   உண்டாக்கட்டும்!
செனட்டர் டத்தோ டி.மோகன் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர் டிச31.–
     நம் வாழ்வில் புதிய சிந்தனையையும், புதிய எழுச்சியையும் ஏற்படுத்தும் ஆண்டாக பிறக்கும்  புத்தாண்டை  நாம்  வரவேற்போம். இனம்,மதம்,மொழி கடந்து ஒற்றுமையோடு நாட்டின் வளப்பத்திற்கு துணை நிற்போம்.
நாட்டின் தேசிய நீரோடையில்  இணைந்து நமது சமுதாயமும் சாதனைகள் பல புரிந்து முன்னேறுவோம்! நாட்டை மென்மேலும் முன்னேற்றுவோம் என மஇகாவின் உதவித்தலைவரும், மிஃபாவின் தலைவருமான செனட்டர்  டத்தோ டி.மோகன் தனது  புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வருடம் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை நிலைத்திருக்க செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  நமது சமுதாயத்தினர் குறிப்பாக இளைஞர்கள் விளையாட்டு, பொருளாதாரம், கல்வி என அனைத்து துறைகளிலும் வெற்றி நடை போட்டு சமுதாயத்திற்கு பெருமையை தேடித்தர உறுதி கொள்ள வேண்டும்.
தொலைநோக்கு சிந்தனையோடும், சீர்மிகு கருத்துக்களை தாங்கியும் நாம் பயணிப்போம்.

புதிய அரசியல் சூழலில்  நமக்கான வாய்ப்புகளை இழக்காமல் அதனை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்ற காணும் நிலையினை கொண்டிருத்தல் அவசியம் ஆகும்.

இந்த  புத்தாண்டு இடர்பாடுகளை நீக்கி நாட்டு மக்களின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் ஊறு விளைக்காமல் ஒரு சிறந்த ஆண்டாக மலர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்அனைவருக்கும் இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என டத்தோ டி.மோகன் தனது வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார்.

Comments