பினேங் சென்ட்ரல் எனும் வாசகம் தமிழ் மொழியில் எழுதப்படாதது ஏன்.? பொது அமைப்புகள் கேள்வி.?

பினேங் சென்ட்ரல் எனும்  வாசகம்  தமிழ் மொழியில் எழுதப்படாதது ஏன்.?
பொது அமைப்புகள் கேள்வி.?

மு.வ.கலைமணி

பினாங்கு, ஜன.1.
        பினாங்கு தீவையும், பட்டர்வொர்த் கடல் பகுதியை இணைக்கும் பெர்ரி சேவையின் மையப்பகுதி வர்த்தக மையமாக  புதியதாக கட்டப்பட்டு அண்மையில் திறப்பு விழா கண்டது.

வியாபார மையத்தோடு பேருந்துகள், வாடகை வாகனங்கள் நிறுத்துமிடமாக மிகப்பெரிய வர்த்த மையமாக அமையப்பெற்றிருக்கும்  அக்கட்டட நுழைவாயிலில் ஆங்கிலம், மலாய், சீன மொழிகளில் வரவேற்பு  எழுதப்பட்டிருக்கிறது.
ஆனால், தமிழ் மொழி மட்டும் விடுப்பட்டுள்ளது.
இது ஒரு புறக்கணிப்பு நடவடிக்கையென  பினாங்கு மாநில அளவில் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.

தமிழ் பற்றாளர்கள் முதல் தமிழ் அமைப்புகள், ஆலயங்களின் பிரதிநிதிகள், தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் என பல தமிழ் ஆர்வலர்கள் புலனம், முக நூல் போன்ற சாதனங்களின் வழி குரல் கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து தேசம் ஊடகத்திடமும் பலர் இக்குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் செய்தியை பரப்பும்படி கேட்டுக் கொண்டனர்.

இத்தகைய குறைகள் நம் தமிழ் மொழிக்கு மட்டுமே நிகழ்வதாகவும் இது ஒரு கேவலமான நடவடிக்கையாகவும் இருக்கிறது என்றும் இதனை களைய நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி நிரந்தர தீர்வு காண வேண்டுமென்று தமிழ் ஆர்வலர்கள் பலர் தெரிவித்தனர்.

இதனிடையே,
மாநில அளவில் பெரும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளதானது, மிக விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Comments