செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு! சபாநாயகர் பை சோர் லொல், அமைச்சர் சேவியர் கலந்து கொண்டனர்

செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு!
சபாநாயகர் பை சோர் லொல், அமைச்சர் சேவியர் கலந்து கொண்டனர்

குணாளன் மணியம்

கிள்ளான், டிச.11-
          செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு அண்மையில்  செந்தோசாவில் நடைபெற்றது.
இதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.           தாமான் செந்தோசா பாசார் மாலாம் வளாகத்தில் நடைபெற்ற  இந்த தீபாவளி பொது உபசரிப்பில் சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர் பை சோர் லொல், அமைச்சர் சேவியர் ஜெயகுமார், மாண்புமிகு இங் சுய் லிம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.           இந்த தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து கொண்ட பிரமுகர்கள், பொது மக்கள் அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டன.அதோடு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கலைஞர் ஜெயசீலன் நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக அறிவிப்பு செய்து நிகழ்ச்சியை வழி நடத்தினார். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும்  செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி. குணராஜ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Comments