ஜொகூர் ஆயர் மானிஸ் தோட்ட கிளைத் தமிழ்ப்பள்ளியை யார் காப்பாற்றுவது? வே.குணாளன் கேள்வி

ஜொகூர் ஆயர் மானிஸ் தோட்ட கிளைத் தமிழ்ப்பள்ளியை யார்  காப்பாற்றுவது? 
வே.குணாளன் கேள்வி

குணாளன் மணியம்

கோலாலம்பூர், டிச.18-
       மூடுவிழாவை எதிர்நோக்கியிருக்கும் ஜொகூர் ஆயர் மானிஸ் தோட்ட கிளைத் தமிழ்ப்பள்ளியை யார்  காப்பாற்றுவது என்று ம.இ.கா தகவல் பிரிவுத் தலைவர்
வே.குணாளன் கேள்வி எழுப்பியுள்ளார்.
         நாட்டில் தமிழ்ப்பள்ளிகளை பாதுகாக்க பலரும் போராட்டம் நடத்தி வரும் வேளையில் மூவார், ஜாலான் கலிடி தமிழ்ப்பள்ளியின் கிளைப் பள்ளியான  ஆயர் மானிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே படிக்கும் பட்சத்தில் அப்பள்ளியை டிசம்பர் 31ஆம் தேதியோடு மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது மிகுந்த கவலையளிப்பதாக தேசம் வலைத்தளத்திடம் சிப்பாங் மஇகா தொகுதி தலைவருமான குணாளன் தெரிவித்தனர்.
          ம.இ.கா காலத்தில் தமிழ்ப்பள்ளிகள் பாதுகாக்கப்பட்டு வந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், மாணவர் பற்றாக்குறையினால் மூடப்படும் அபாயத்தை எட்டியுள்ள இத்தகைய தமிழ்ப்பள்ளிகளை தமிழர்கள்தான் காப்பாற்ற வேண்டும். மொழிப்பற்று என்று சொல்லிக் கொண்டிருக்காமல் ஆயர் மானிஸ் போன்ற தமிழ்ப்பள்ளிகளை காப்பாற்ற சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் என்று குணாளன் வலியுறுத்தினார்.
            இந்த ஆயர் மானிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியை காப்பாற்றும் கடப்பாடு கடப்பாடு கண்டிப்பாக நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்திற்கு இருக்கிறது. ஏனெனில் அவர்கள்தான் தற்போது ஆட்சியில் இருக்கிறார்கள். அதேநேரத்தில் அடுத்தாண்டு முதலாம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களை அப்பள்ளிச் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் இந்திய பெற்றோர்கள் இப்பள்ளிக்கு அனுப்ப முன் வர வேண்டும்.
           நாட்டில் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளை பாதுகாக்கும் கடப்பாடு அனைவருக்கும் இருக்கிறது. இதில் குறிப்பாக நடப்பு அரசாங்கம் இப்பிரச்சினைக்கு முறையாக தீர்வு காண முயல வேண்டும் என்று வே.குணாளன் கேட்டுக் கொண்டார்.
        இந்த ஆயர் மானிஸ் தமிழ்ப்பள்ளி பக்ரி நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமையப் பெற்றள்ள இப்பள்ளி மூடுவிழா காண்பதற்கு யார் காரணம் என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்று குணாளன் சொன்னார்.
         இந்த  ஆயர் மானிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 6 மாணவர்கள் மட்டுமே படித்து வருகிறார்கள். இரண்டு மாணவர்கள் மட்டுமே படித்து வரும் சுங்கை பாப்பான் தமிழ்ப்பள்ளியைக் காப்பாற்ற பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments