தீயணைப்பு வீரர் முகமட் அடிப் மரணம் மலேசியாவிற்கு கருப்பு தினம்! ஆரம்பத்திலேயே தீர்வு கண்டிருந்தால் மரணத்தை தவிர்த்திருக்கலாம்! - பிரசாத் சந்திரசேகரன்

தீயணைப்பு வீரர் முகமட் அடிப் மரணம் மலேசியாவிற்கு கருப்பு தினம்!
ஆரம்பத்திலேயே தீர்வு கண்டிருந்தால் மரணத்தை தவிர்த்திருக்கலாம்!
- பிரசாத் சந்திரசேகரன்

கோலாலம்பூர், டிச.18-
            சீபீல்ட் ஆலயப் பிரச்சினைக்கு தொடக்கத்திலேயே தீர்வு கண்டிருந்தால் முகமட் அடிப் மரணம் நிகழ்ந்திருக்காது என்று ம.இ.கா செலாயாங் தொகுதி் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் பிரசாத் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
       
       அடிப்பின்  மரணம் மலேசியாவிற்கு கருப்பு தினம். முதலாவதாக இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருக்கவே கூடாது. இச்சம்பவம் அமைச்சர்களுக்கு ஒரு பெரிய பாடாமாகும். மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாக செவி சாய்த்திருந்தால் இத்தகைய அசம்பாவிதங்கள், மரணங்களை தவிர்த்திருக்கலாம் என்றார் பிரசாத்.
         
         இந்த  சம்பவத்திற்கு காரணமானவர்களை காவல் துறை அடையாளம் காண தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சீபீல்ட் ஆலய நடவடிக்கை குழு இவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.
       
        சீபீல்ட் ஆலய பிரச்சினை எழுந்த போது 6, 7 பேர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பிறகு நாடாளுமன்றத்தில் 100 பேர் கூடி வழங்கிய மனுவும் நிராகரிக்கப்பட்டது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் யாரும் தீர்வு காண முன் வரவில்லை.
       
      இந்நிலையில் ஆலயத்திற்குள் குண்டர்கள் நுழைந்த போது ஆலயப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இவை எல்லாமே ஆலயப் பிரச்சினையில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாகவே நிகழ்ந்துள்ளது. இதனால் போராட்டத்தில் ஒரு மரணம் நிகழ்ந்து விட்டது.
       
      மலேசிய அரசாங்கம், மாநில அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் . மக்களின் கோரிக்கைகளை கவனிக்க வேண்டும். சட்டத்தை கைகாட்டி அதற்கு தீர்வு காணாவிட்டால் பிரச்சினை தலைதூக்கி பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் வழங்கிய ஆட்சியில் மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கடமையாகும் என்று கூறிய பிரசாத் சந்திரசேகரன் முகமட் அடிப் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.

Comments