ஒன்றுபட்டு முன்னேறி சாதனை படையுங்கள்! மலேசிய கலைஞர்களுக்கு ரத்னவள்ளி அம்மையார் வேண்டுகோள்!

ஒன்றுபட்டு முன்னேறி சாதனை படையுங்கள்! மலேசிய  கலைஞர்களுக்கு ரத்னவள்ளி அம்மையார் வேண்டுகோள்!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், டிச. 9-
          மலேசியக் கலைஞர்கள் வாழ்க்கையில் செல்வசெழிப்போடு வாழ வேண்டுமானால் ஒற்றுமைக்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்றும் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

         மலேசியக் கலைஞர்கள் யாராக இருந்தாலும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையோடு இருக்க வேண்டும்.
இப்படி ஒற்றுமையாக இருந்தால் கண்டிப்பாக பல வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறி சாதனை படைக்க முடியும் என்று  மலேசிய இசைக் கலைஞர்களுக்காக நடத்தப்பட்ட

மிண்ட்ரா விருதளிப்பு விழாவில் உரையாற்றிய போது கலைஞர்களின் காவலர் என்று வர்ணிக்கப்படும் ரத்னவள்ளி அம்மையார் தெரிவித்தார்.

          "நான் சினிமா கலைஞர்களுக்கு ஆதரவு வழங்க மாட்டேன். மலேசியக் கலைஞர்கள்தான் எனக்கு முக்கியம். இதற்காக தொடர்பு, பல்லூடக அமைச்சர் மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்டிஎம், மின்னல் எஃப்எம் வழி அதிகமாக உள்ளூர் படைப்புகளை ஒலி, ஒளியேற்ற வேண்டும். இதற்காக மலேசிய கலைஞர்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்று ரத்னவள்ளி அம்மையார் கேட்டுக் கொண்டார்.
           மலேசியக் இசைக் கலைஞர்கள் தரமான ஆல்பம் படைப்புகளை வெளியிட வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் முதல் முறையாக மலேசிய இந்திய இசைக் கலைஞர்கள் ஒலிப்பதிவு சங்கம் (MALAYSIAN INDIAN RECORDING ARTIST ASSOCIATION) மிண்ரா விருது விழா 2018ஐ நேற்று டிசம்பர் 9 சனிக்கிழமை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, ரத்னவள்ளி அம்மையார், டத்தோ ராஜூ, மாண்புமிகு செனட்டர் சுரேஷ் உள்ளிட்ட பிரமுகர்களும் ஆதரவாளர்களும் திரளான கலைஞர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments