திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் இறைவனடி சேர்ந்தார்!

திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் இறைவனடி சேர்ந்தார்!

      ரகு குணசேகரன்

திருவண்ணாமலை,டிச.9-
   திருவண்ணாமலையில்  மக்களால் குறிப்பாக திருபண்ணாமலை பக்தர்களால் போற்றப்பட்டு வந்த பிரபல சாமியார் மூக்குப்பொடி சித்தர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் திருவண்ணாமலை சேஷாத்திரி  ஆசிரமத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இறைவனடி சேர்ந்தார்.

     திருவண்ணாமலையில் அவர் நினைக்கும் இடத்தில் உறங்கும், சாப்பிடும் குருவான மூக்குப் பொடி சித்தர் ஒரு காலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார்.

அதன்பிறகு பல ஆண்டுகள் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்து வந்தார். இந்நிலையில் இன்று டிசம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் அதிகாலை 5 மணிக்கு ( மலேசிய நேரம் காலை 7.30 மணி) இறைவனடி சேர்ந்தார். மூக்குப் பொடி சித்தருக்கு 90 வயதுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

        திருவண்ணாமலையில் பல்லாண்டுகளுக்கு முன்பு வந்த மூக்குப்பொடி சித்தரின் உண்மையான பெயர் மொட்டையக்கவுண்டர். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம். இவர் மூக்குப்பொடியை அதிகம் பயன்படுத்துவதால் பக்தர்களால் மூக்குப் பொடி சித்தர் என அழைக்கப்பட்டார்.
           மூக்குப்பொடி சித்தர் பலருக்கு குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு குருவாக இருந்து வந்துள்ளார். அந்த வகையில் டிடிவி தினகரன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் அவ்வப்போது தரிசனம் செய்து வந்தனர்.
         இந்நிலையில் மூக்குப்பொடி  சித்தர் கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்ரி ஆசிரமத்தில் சில காலம் தங்கியிருந்தார். இச்சமயத்திலர
இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. இவர் சில காலம் உணவு உட கொள்ளாமல் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தங்கியிருந்த சேஷாத்ரி கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஆசிரமத்தில்  இன்று அதிகாலை 5.00 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.
          மூக்குப்பொடி சித்தர் உடல் சேஷாத்திரி ஆசிரமத்தில் பக்தர்கள் அஞ்சலிக்காக கிடத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் சேஷாத்திரி ஆசிரமத்தில் நல்லடக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments