ECO TEAM கஜா நிவாரணப் பொருட்களுடன் களம் இறங்கியது பொன்னமராவதி தேசம் வளைத்தளம்!

ECO TEAM கஜா நிவாரணப் பொருட்களுடன் களம் இறங்கியது பொன்னமராவதி தேசம்  வளைத்தளம்!

இரா.பாஸ்கர் பொன்னமராவதி தேசம் செய்தியாளர்

 பொன்னமராவதி, டிச.5-
          கஜா புயல் கோரத்தாண்டவத்தால் கடும் பாதிப்புக்குள்ளான புதுக்கோட்டை மாவட்டம் செம்மாவிடுதி, கந்தர்வ கோட்டை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியது ECO TEAM..
       கஜா புயலால் உருக்குலைந்த செம்மாவிடுதி, கந்தர்வகோட்டைக்கு
கை கொடுத்தது ஈசிஓ டீம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து தங்களால் முடிந்த உதவிகளை செய்த பொன்னமராவதி காமராஜ் நகரைச் சேர்ந்த இளைஞர்கள் எஸ்.மன்சூர், எம்.அருண்குமார் அப்பகுதி மக்களின் நிலமையை தனது நண்பர்களுக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து சென்னை, சேலம், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் இருந்து ஒரு வாகன முழுவதும் அப்பகுதி மக்களுக்கு தேவையான அரிசி, காய்கறி, பருப்பு, கொசு பத்திகள், பாய், தலையணி, போர்வை, புதுத் துணிகள், பிஸ்கட், சோப், சம்பு, பெண்களுக்கு தேவையான நாப்கின் ஆகியவற்றுடன் காமராஜ் நகருக்கு வருகை தந்தனர் ECO TEAM. அவர்களுக்கு கை கொடுக்கும் வகையில்  மலேசியாவிலிருந்து தர்ஷினி அனுப்பிய பணத்தில் 100 பாக்கெட் பால், உருளைக் கிழங்கு, வெங்காயம் போன்றவற்றை பொன்னமராவதி தேசம் பத்திரிக்கை வளைத்தளம் சார்பில் ஈசிஓ டீமிடம் வழங்கப்பட்டது. இதனை ECO TEAM பொன்னமராவதியில் இருந்து அப்பகுதிக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்ட செம்மாவிடுதி, கந்தர்வகோட்டையை சேர்ந்த பொது மக்கள் சார்பிலும் பொன்னமராவதி தேசம் பத்திரிக்கை வளைத்தளம் சார்பில் சென்னை, சேலம், திருவண்ணாமலையில் இருந்து புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு உதவிய  ECO TEAM சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Comments