பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் 16 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள்! ஜனவரி 19 வெள்ளிரதம் புறப்பாடு!

பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் 16 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள்!
ஜனவரி 19 வெள்ளிரதம் புறப்பாடு!

செய்தி:
குணாளன் மணியம்
படங்கள் : முகேஸ்வரன்

பத்துமலை, ஜன.12-
        பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் 16 லட்சம் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ  ஆர்.நடராஜா கூறினார்.

இவ்வாண்டு பத்துமலை தைப்பூசத் திருவிழா ஜனவரி 21 கொண்டாடப்படும் வேளையில் தொடர் விடுமுறையாக இருப்பதால் 16 லட்சம் பக்தர்கள் பதரதுமலைக்கு வந்த வண்ணம் இருப்பார்கள் என்று பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டான்ஸ்ரீ் ஆர்.நடராஜா அவ்வாறு தெரிவித்தார்.

பத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிரதம் ஜனவரி 19 சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து பத்துமலை நோக்கி ப புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற பகல் 2.30 மணிக்கு பத்துமலை வந்தடையும். வெள்ளிரதம் மீண்டும் ஜனவரி 22 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் கோலாலம்பூர் ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயம் நோக்கி புறப்பட்டு அதிகாலையில் ஆலயம் வந்தடையும் என்றார் டான்ஸ்ரீ நடராஜா.

இந்த ஆண்டு தைப்பூசத்திற்கு பக்தர்கள் நலனுக்காக பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
 பக்தர்கள் தங்கள் பிள்ளைகள், உடமைகளை பாதுகாத்தது கொள்ள வேண்டும். தைப்பூசத் திருவிழாவின் போது நீண்ட விடுமுறையாக இருப்பதால் பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருக்கும் என்பதால் பக்தர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

இந்து சமய விழாவான தைப்பூசத் திருவிழாவை பக்தர்கள் நெறிமுறைகளுடன் கொண்டாட வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

Comments