மலேசிய திரைப்பட வரலாற்றில் 2019 ஆண்டின் மிகப்பெரிய படம்! "தமனி" படப்பிடிப்பு தொடங்கியது

மலேசிய திரைப்பட வரலாற்றில் 2019 ஆண்டின் மிகப்பெரிய படம்!
"தமனி" படப்பிடிப்பு தொடங்கியது

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜன.3-
         ஒரு காலத்தில் மலேசியாவில் திரைப்படம் தயாரிக்கப்படுமா எனும் கேள்வி எழுந்த நிலையில் இன்று சினிமா திரைப்படங்களுக்கு நிகராக மலேசியத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு நமக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய சினிமா போல் மலேசிய திரைப்பட தயாரிப்பு வர்த்தக ரீதியில் இல்லாவிட்டாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் படமெடுத்து பணம் சம்பாதிப்பவர்களும் முதலீடு செய்த பணத்தை திரும்ப  பெறுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.


இந்நிலையில் மலேசிய திரைப்பட தயாரிப்பில் முத்திரை பதித்து வரும் டாக்டர் செல்வகுமார், பாரதிராஜா தயாரிப்பில் 2019ஆம் ஆண்டின் மிகப்பெரிய படமான "தமனி" திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2 புதன்கிழமை தொடங்கியது.


இதுவொரு "புளோக்பாஸ்டர்" திரைப்படம் என்பதால் மலேசிய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. "தமனி" பெயரைக் கேட்டவுடன் ஏதோ ஒரு சினிமா திரைப்படத்தின் பெயர் போல அமைந்துள்ளது. "தமனி" என்ற ஒரு இளம் பெண்ணின் கதை இதுவாகும். இதில் ஈஸ்வர், தேவா, டேவிட் உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்துள்ளனர். "லவ் இன் 12 ஹவர்ஸ்" திரைப்படத்தில் நடித்த கலைஞர்கள், திரைபடக்குழுவினர் முழுக்க முழுக்க தமனியில்  பணியாற்றியுள்ளனர்."தமனி" இரண்டு மணி நேரத்திற்கு குறைவான நேரத்தை கொண்ட திரைப்படமாகும்.சுமார் ஐந்து லட்சம் வெள்ளி செலவில் தயாரிக்கப்பட்டு வரும் "தமனி" திரைப படம் பத்துகேவ்ஸ், ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, அம்பாங் ஆகிய இடங்களின் சுற்று வட்டாரத்தில் 15 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெறும்.


மலேசிய வரலாற்றில் மிகப்பெரிய படமாக கருதப்படும் "தமனி"யை மதன் இயக்கியுள்ளார். இப்படத்தை டாக்டர் செல்வமுத்து, பாரதிராஜா தயாரித்துள்ளன்னர்.
2019ஆம் ஆண்டு திரையேறத் திட்டமிடப்பட்டுள்ள "தமனி" மலேசிய ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம். தமனி வெற்றி பெற வாழ்த்துகிறோம்!
-தேசம்

Comments