இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அதிகாரப்பூர்வமாக கலந்து கொள்கிறார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  ஜனவரி 22 பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்
மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அதிகாரப்பூர்வமாக கலந்து கொள்கிறார் 

தேசம் செய்திகளுக்காக இந்தியா, வரணாசியில் இருந்து குணாளன் மணியம்

 வரணாசி(காசி), ஜன.21-
         இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜனவரி 22 காலை 8.00 மணிக்கு இந்திய, உத்திரப் பிரதேசம், வரணாசியில் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை  அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார். மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவரும்  ம.இ.கா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் இம்மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக கலந்து கொள்ளவிருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தி ஜனவரி 7ஆம் தேதி இந்தியா திரும்பியதை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் புலம்பெயர்ந்த இந்தியர்களின் பிரவாசி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்கின்றனர். அந்த வகையில் ம.இ.கா சார்பில்  அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலைமையில் 230  பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வரணாசியில் அணிதிரண்டுள்ளனர்.

ADVERTISEMENT






 ADVERTISEMENT

இந்த முறை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் கும்பமேளா புனித நீராடல் நிகழ்விலும்  ஜனவரி 26 பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்திய குடியரசு தின கொண்டாட்டத்திலும் வெளிநாட்டு வாழ் இந்துக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த 15ஆவது பிரவாசி மாநாடு முதல் முறையாக அதற்கேற்ப ஒத்திவைக்கப்பட்டு ஜனவரி 21 தொடங்கி 23ஆம் தேதி வரையில் நடத்தப்படுகிறது.

இந்த கும்பமேளா புனித நீராடல்  திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால் இந்திய உட்பட  உலகம் முழுவதும் இருந்து  கோடிக்கணக்கான இந்துக்கள்  கலந்து கொண்டு புனித நீராடுகின்றனர். இந்த கும்பமேளாவை உலக மக்கள் காண வேண்டும் என்பதற்காகவே பிரவாசி மாநாடு வரணாசியில் நடத்தப்படுகிறது.

இந்த பிரவாசி மாநாநாட்டில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் இந்தியத்  தலைவர்களும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலைமையிலான ம.இ.கா பேராளர்களும் கோபியோ எனப்படும் புலம்பெயர்ந்த இந்திய அமைப்பின் அனைத்துலக தலைவர் செல்வா தலைமையிலான பேராளர்களும்
இம்மாநாடு குறித்த செய்திகளை சேகரித்து தத்தம் ஊடக வாசகர்களுக்கு வழங்க
ஊடகவியலாளர்களுமாக 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments