மலேசிய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க குருகுல இயக்கத்தின் 24ஆம் ஆண்டு அன்னதானம்! பத்துமலையில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு வழங்கப்படும்! நிதியுதவி, பொருளுதவி வழங்க தலைவர் பன்னீர்செல்வம் கோரிக்கை

மலேசிய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க குருகுல இயக்கத்தின்  24ஆம் ஆண்டு அன்னதானம்!
பத்துமலையில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு வழங்கப்படும்!
நிதியுதவி, பொருளுதவி வழங்க தலைவர் பன்னீர்செல்வம் கோரிக்கை

குணாளன் மணியம்
படங்கள்/காணொளி : முகேஸ்வரன்

பத்துகேவ்ஸ், ஜன.16-
        மலேசிய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க குருகுல சங்கத்தின் ஏற்பாட்டில் பத்துமலையில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்படவிருப்பதால் பக்தர்கள் நிதியுதவி, பொருளுதவி வழங்கும்படி அதன் தலைவர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த 24ஆம் ஆண்டு  அன்னதானம் ஜனவரி 20 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மணி 12.00 தொடங்கி தைப்பூசத் தினத்தன்று இரவு வரையில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.


இந்த அன்னதானத்திற்கு பொது மக்களிடமிருந்து நிதியுதவியை எதிர்பார்க்கிறோம். இது அன்றைய தேவைகளுக்கு  காய்கறிகள் உள்ளிட்ட பல பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படும் என்பதால் மக்களிடமிருந்து நிதியுதவி, பொருளுதவியை பெரிதும் எதிர்ப்பார்ப்பதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


மக்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் பெரும் புண்ணியமாகும். பசியில் வாடும் மக்களுக்கு உணவளிப்பது தர்மமாகும் என்று வள்ளலார் எழுதிவைத்திருக்கிறார்.

 ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது எளிதான காரியமல்ல. ஆகையால், மக்கள் நிதியுதவி, பொருளுதவி வழங்கும்படி பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.
 தொடர்புக்கு 03-6187  6773, எ.கார்த்திக் - 012-383 4115, பாலா-016-247 0052, சிவயோகம்-012-301 6005, கே.மாரியப்பன்- 017-379 8191.

Comments