மலேசியாவின் முதல் 24 மணிநேர தமிழ் செய்தி கூஃபிலிக்ஸ் தமிழ் அலைவரிசையில் பிப்ரவரி தொடங்கி தேசம் செய்திகள் தோற்றுநர் குணாளன் மணியம் அறிவிப்பு

மலேசியாவின் முதல் 24 மணிநேர தமிழ் செய்தி 
கூஃபிலிக்ஸ் தமிழ் அலைவரிசையில் பிப்ரவரி தொடங்கி தேசம் செய்திகள்
தோற்றுநர் குணாளன் மணியம் அறிவிப்பு

ஜி.முகேஸ்வரன்

கோலாலம்பூர், ஜன.31-
            மலேசியாவின் முதல் 24 மணிநேர தமிழ்செய்தியை கூஃபிலிக்ஸ் தமிழ் அல்லவரிசையில் தேசம் ஊடகம் "தேசம் செய்திகள்" எனும் பெயரில் பிப்ரவரி மாதம் தொடங்கி வழங்கவிருப்பதாக தேசம் தோற்றுநர், தலைமையாசிரியர் குணாளன் மணியம் அறிவித்துள்ளார்.

மலேசியாவில் 24 மணிநேர தமிழ்செய்திக்கு தனி அலைவரிசை இதுவரை இல்லை. அதனை பூர்த்தி செய்யும் வகையில் கூஃபிலிக்ஸ் இணையத்தள ஒருங்கிணைப்பு தொலைக்காட்சி அலைவரிசையில் 24 மணிநேர "தேசம் செய்திகள்" ஒளியேறும் என்று குணாளன் மணியம் தெரிவித்தார்.

ஊடகத் துறையில் 28 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள குணாளன் மணியம் கடந்த 1990இல் தமது பத்திரிகை பயணத்தை தொடங்கினார். கடந்த 2008இல் சொந்தமாக தேசம் பத்திரிகையை தொடங்கி 2016இல் அதனை வலைத்தளமாக  கொண்டு வந்தார். 2018இல் தேசம் இணைய தொலைக்காட்சியை தொடங்கிய குணாளன் மணியம் தற்போது கூஃபிலிக்ஸ் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையில் 24 மணிநேர தேசம் தமிழ் செய்திகளை கொண்டு வரவிருக்கிறார்.

 மலேசிய ரசிகர்களுக்காக 50 தமிழ் தொலைக்காட்சி, செய்தி, இசை நிகழ்ச்சி, வானொலி என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கும்  கூஃபிலிக்ஸ் தமிழ் அலைவரிசையில்  24 மணிநேர அண்மைய மலேசிய செய்திகளை தேசம் கொண்டு வருகிறது.

 இதில் செய்திகள் மட்டுமன்றி சிறப்பு பேட்டி, அரசியல் தலைவர்கள் கருத்து, பொதுமக்கள் கருத்து, தேசம் அலசல், தேசம் தொகுதி வலம் என்று பலதரப்பட்ட தொகுப்புகளும் இதில் இடம்பெறும்.

மலேசியர்கள்  தொலைபேசி ஆப்ஸ், இணையத்தள ஒருங்கிணைப்பு தொலைக்காட்சி தமிழ் செய்திகள் உள்ளிட்ட பல  நிகழ்ச்சிகளை காண வேண்டும் என்ற நோக்கத்தில்  கூஃபிலிக்ஸ் இந்த தமிழ் செய்திகளை  வழங்குகிறது. இந்த கூஃபிலிக்ஸ் அலைவரிசையில் 24 மணிநேர முதல் தமிழ் செய்தியாக தேசம் செய்திகள் மலரவிருக்கிறது.

கூஃபிலிக்ஸ் தமிழ்நாடு, ஐரோப்பியா, கனடா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும்  கூஃபிலிக்ஸ் தமிழ் அலைவரிசையில் கொண்டு வருகிறது.  கூகேன் மலேசிய நிறுவனத்தின் கீழ் மலேசிய தொடர்பு பல்லூட ஆணையத்தின் லைசென்ஸ்சுடன் கூஃபிலிக்ஸ் தமிழ் அலைவரிசை ஒளியேறி வருகிறது என்றார் குணாளன் மணியம்.

இந்த கூஃபிலிக்ஸ் தமிழ் அலைவரிசையை  கைப்பேசியில் இணைத்துக் கொண்டு பார்க்கலாம். அதேநேரத்தில்  வீட்டிலும் டெக்கோடர் மூலம் பார்க்கலாம். இந்த டெக்கோடர் செட்டில் ஒரு ரிமோர்ட் கோன்ட்ரோல், எச்.டி.எம்.ஐ. கேபல், அது சார்ந்த பல இலவசப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. இந்த டெக்கோடரை வீட்டில் உள்ள தொலைக்காட்சியுடன் பொருத்தி விட்டால் கைப்பேசியில் உள்ள இணையச் சேவையை கூஃபிலிக்ஸுடன் இணைத்துக் கொண்டு 24 மணி நேரமும் இடைவிடாத தேசம் செய்திகளை காண முடியும் என்று குணாளன் சொன்னார்.

கூஃபிக்ஸ் டெக்கோடரைப் பெற ஆண்டிற்கு 1 முறை 399 வெள்ளி சிறப்புச் சலுகையாக கட்டணம் வழங்கப்படுகின்றது. 1 ஆண்டுக்கு இந்த அலைவரிசையை வாடிக்கையாளர்கள் பார்க்கலாம். இது மிகவும் மலிவான விலை என்றும் இணையம் வழி தங்குதடையின்றி 50 அலைவரிசையில் தமிழ் நிகழ்ச்சிகளையும் அதில் ஒரு அலைவரிசையான தேசம் செய்திகளையும் பிப்ரவரி தொடங்கி காணலாம் என்று குணாளன் மணியம் தெரிவித்தார்.

Comments