மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் திரையேற்றவிருக்கும் "பேட்ட" திரைப்படம் வெ.3 கோடி வசூல் சாதனை படைக்கும்! டத்தோ அப்துல் மாலிக் நம்பிக்கை

மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் திரையேற்றவிருக்கும் "பேட்ட" திரைப்படம் வெ.3 கோடி வசூல் சாதனை படைக்கும்!
டத்தோ அப்துல் மாலிக் நம்பிக்கை

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜன.5-
           மலேசியாவில் திரைப்படத் துறையில் முத்திரை பதித்து வரும் மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 23ஆவது திரைப்படமான "பேட்ட" 3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனை படைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் "பேட்ட" திரைப்படத்திற்கு இந்தியாவை தவிர்த்து உலக உரிமம்  பெற்றுள்ள மாலிக் ஸ்டிரீம்ஸ் காப்பரேசன் இப்படத்தை உலகளவிய நிலையில்  ஐனவரி 10 தொடங்கி  ஏககாலத்தில்  திரையேற்றவிருக்கிறது.
 இப்படம் மலேசியாவில் 3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனை படைக்கும் என்று மலேசிய மலாய் பாடகர்கள் அஸ்வான், முவாட்ஸ் பாடியிள்ள "பேட்ட" திரைப்படத்தின் "உல்லாலா" பாடல் அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் டத்தோ மாலிக் அவ்வாறு சொன்னார்.

மலேசியாவில் 140 திரையரங்குகளில் "பேட்ட" திரைப்படம் திரையேற மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் பிரமாண்ட விளம்பர ஏற்பாடுகளோடு தயாராகி வரும் வேளையில் "உல்லாலா" பாடலை நம்ம ஊர் மலாய் பாடகர்கள் அஸ்வான், முவாட்ஸ் இருவரும் தமிழ்மொழியில் மொழி உச்சரிப்புடன் பாடி அசத்தியுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் சரத்குமார், யுவாஜி பயிற்சி வழங்கினர். இப்பாடலை 5 நாட்கள் பயிற்சி மேற்கொண்டு 10 மணிநேரம் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


"பேட்ட" திரைப்படத்தை விளம்பரப்படுத்த மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நாடு தழுவிய நிலையில் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. இதில் கனிமநீர் போத்தலில் "பேட்ட" போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் லாரி, லம்போஜினி கார், பேட்ட டி-சட்டை என்று பலவழிகளில் பேட்ட திரைப்படத்தை போஸ்டர் வழி விளம்பரப்படுத்தி வருகின்றனர்.


மலேசியாவில் இதுவரை எந்த படநிறுவனமும் மேற்கொள்ளாத நடவடிக்கைகளை மாலிக் ஸ்டிரீம்ஸ் மேற்கொண்டு வருகிறது. "பேட்ட" போஸ்டர் ஒட்டப்பட்ட  லாரி, கார்  கோலாலம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில் கோலாலம்பூர், ஜொகூரில் பெரிய எல்இடி டிவியிலும் "பேட்ட" டீசர் ஒளிபரப்பப்பட்டு  வருகிறது.
 "பேட்ட" திரைப்படத்திற்கான அறிமுகவிழா, சிறப்பு காட்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தருவார் என்று மலேசிய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 "பேட்ட" திரைப்படம் திரையேறும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் "பேட்ட" திரைப்படத்திற்கான ஏற்பாடுகளை மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள டத்தோ அப்துல் மாலிக் நேரடி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த அறிமுக விழா மற்றும் சிறப்புக் காட்சி நிகழ்வில் "பேட்ட" திரைப்பட நடிகர் பட்டாளம் கலந்து கொள்ளவிருக்கிறது. அதேநேரத்தில் முக்கியப் பிரமுகர்களும் இதில் கலந்து கொள்ளவிருப்பதாக தெரியவந்துள்ளது. "கபாலி" திரைப்படத்தின் வழி மலேசியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள  ரஜினிகாந்த் டத்தோ அப்துல்  மாலிக்குடன் நல்ல நட்பு கொண்டு வருகிறார்.

கபாலியில்  தொடங்கிய ரஜினி-மாலிக் நட்பு இன்றளவும்  தொடர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் சூப்பர் ஸ்டார் "பேட்ட" திரைப்பட அறிமுக விழா மற்றும் சிறப்பு காட்சியில் கலந்து கொள்ள வருவார் என்று மலேசிய ரசிகர்கள் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

"கபாலி" திரைப்படம் மலேசியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து 60 நாட்கள் வரை  நடைபெற்றது. இதில் மலேசியக் கலைஞர்கள் சிலரும் நடித்துள்ளனர். மலாய் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள கபாலி மலேசியா-இந்தியா ஆகிய இருநாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியிள்ளது.

ரஜினி என்றால் மலாய்க்காரர்கள், சீனர்களும்  கொள்ளும் அளவிற்கு "கபாலி" முக்கியத் பங்காற்றியது. இந்த "பேட்ட"யின் உல்லாலா பாடல் அறிமுக நிகழ்வில் மலேசிய மலாய் திரைப்பட நடிகை ஃபாஷுரா, அஸ்வான், முவாட்ஸ் ஆகியோருடன் மாலிக் ஸ்டிரீம்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments