பி40 தரப்பினர் மீது கவனம் தொடரும்! எம்40 தரப்பினர் நலன் மீதும் கேபிகேடி கவனம் செலுத்தும்! சுரைடா கமாருடின் தகவல்

பி40 தரப்பினர் மீது கவனம் தொடரும்!
எம்40 தரப்பினர் நலன் மீதும் கேபிகேடி கவனம் செலுத்தும்!
சுரைடா கமாருடின் தகவல்

புத்ரா ஜெயா, ஜன.29-
        பல்வேறு பொருளாதார நிலையிலான அனைத்து மலேசியர்களுக்கும் நன்மையளிக்கும் மேம்பாட்டு கொள்கை மற்றும் திட்டங்களை அமல்படுத்த வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதன் அமைச்சர் சுரைடா கமாருடின் கூறினார்.

இந்நிலையில் அமைச்சின் தற்போதைய கவனம் பி40 தரப்பினர் மீதே உள்ளது. ஏனெனில் இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் அவர்கள் மத்தியில் அதிக பயனை ஏற்படுத்துவதோடு நாட்டின் பொருளாதார சீரமைப்பிலும் பெரும் பங்காற்றுகிறது என்று அமைச்சர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்,

ADVERTISEMENT
 ADVERTISEMENT

மாதம் 3 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களே பி40 என வகைப்படுத்தப்படுகின்றனர். அரசாங்கத்தின் சிறப்பு திட்டங்களும் உதவியும் இன்றி இத்தரப்பினர் சொந்தமாக வீடுகளை வாங்குவது சாத்தியமில்லை.

அதேவேளையில், நடுத்தர வருமானம் பெறும் எம்40 தரப்பினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் ஆழமான ஆயுவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வின் முடிவில் இவர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய திட்டங்கள் வரையப்படும் என்றார் சுரைடா.

இந்தப் பிரிவினரும் சொந்த வீடுகளைக் கொண்டிருக்க இவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் முழுமையான திட்டம் மற்றும் கொள்கையை அமைச்சு ஆராய்ந்து வருகிறது என்று அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் அமைச்சர் சுரையடா குறிப்பிட்டார்.

Comments