குடும்பதின விழாவை நேர்த்தியோடு நடத்திய ரெங்கநாதன், நீலமேகன், ஐயப்பன் முனியாண்டி, முருகேசன் மதியழகன், அருள்! உயர்வு, தாழ்வு, ஜாதி மதம் பார்க்காதது 48 ஆண்டு நட்பின் அஸ்திவாரம்! முன்னாள் பெண் மாணவர்களை பார்க்க ஆசைப்படுகிறோம்! ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளர் ரெங்கநாதன் நெகிழ்ச்சி

குடும்பதின விழாவை நேர்த்தியோடு நடத்திய ரெங்கநாதன், நீலமேகன், ஐயப்பன் முனியாண்டி, முருகேசன் மதியழகன், அருள்! உயர்வு, தாழ்வு, ஜாதி மதம் பார்க்காதது 48 ஆண்டு நட்பின் அஸ்திவாரம்!
முன்னாள் பெண் மாணவர்களை பார்க்க ஆசைப்படுகிறோம்!
ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளர் ரெங்கநாதன் நெகிழ்ச்சி

செய்தி: 
குணாளன் மணியம்,
படங்கள்: ஹரிஸ்ரீநிவாஸ்

கிள்ளான், ஜன.18-
உயர்வு, தாழ்வு, ஜாதி மதம் பார்க்காததுதான் எங்கள் 48 ஆண்டு நட்பின் அஸ்திவாரம் என்று பத்தாங் பெர்ஜுந்தை முன்னாள் மாணவர்கள் குடும்பதின விழாவில் இதன்
ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளர்களில் ஒருவரான ரெங்கநாதன் நெகிழ்ச்சியோடு கூறினார்.இந்த 48 ஆண்டு நட்பில்  எங்களோடு படித்த நண்பர்களோடு 48 ஆண்டுகளாக மகிழ்ச்சியோடு இருந்து வரும் நாங்கள் எங்களோடு படித்த மாணவிகளையும்
பார்க்க ஆசைப்படுகிறோம்.


இந்த செய்தியை படிக்கும் பத்தாங் பெர்ஜுந்தை  தமிழ்ப்பள்ளியில் எங்களோடு படித்த முன்னாள் மாணவிகள் எங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று  முன்னாள் மாணவர்களின் சார்பில் ரெங்கநாதன் கேட்டுக் கொண்டார்.கடந்த 1971ஆம் ஆண்டில்  முதலாம் வகுப்பில் தொடங்கிய இவர்களின் நட்பு இன்றளவும் தொடர்ந்த வருகிறது. இந்த 48 ஆண்டு நட்பின் முத்தாய்ப்பாக அண்மையில் கிள்ளானில் ஒரு சீன உணவகத்தில் குடும்ப சகிதம் குடும்ப தின விழா மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில்  திரு.ரெங்கநாதன் உதிர்ந்த வார்த்தைகளில்  "உயர்வு-தாழ்வு, ஜாதி-மதம் பார்க்காத்தே இந்த நட்பின் அஸ்திவாரம்" என்ற வார்த்தை அனைவரையும் நெகிழ வைத்தது.


"நாங்கள் 22  ஆண்மகன்களும் இந்த 48 ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திப்போம். இடைநிலைப்பள்ளி படிப்பு முடிந்த பின்னரும் எங்கள் சந்திப்பு தொடர்ந்தது. ஆண்டுக்கு ஒருமுறை வெளியூர் செல்வோம்.

இன்றளவும் மாதம் ஒருமுறை சந்திக்கிறோம். இந்த குடும்பதின விழாதான் எங்களுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. 

குடும்பம் சகிதம் வருகை தந்து ஒரு மகிழ்ச்சிமிக்க மாபெரும் விழாவை நடத்திய மனநிறைவு எனக்கும் நீலமேகன், ஐயப்பன் முனியாண்டி, முருகேசன், மதியழகன், அருள் உள்ளிட்ட 22 பேருக்கும் இருந்ததாக ரெங்கநாதன் தெரிவித்தார்.

இந்த பத்தாங் பெர்ஜுந்தை முன்னாள் மாணவர்களான 22 பேரும் அவர்களின் மனைவி, பிள்ளைகளோடு கலந்து கொண்டனர். இந்த விழாவை ஒரு மாறுபட்ட விழாவாக
நடந்தும் வகையில் முன்னாள் மாணவர்களின் மனைவி, பிள்ளைகளுக்கான போட்டி விளையாட்டுகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் மாணவர் ஐயப்பன் முனியாண்டி, முன்னாள் மாணவர் அக்னி கனகாவின் மனைவி இருவரும் இணைந்து "அன்புள்ள மான் விழியே, ஆசையில் ஒரு கடிதம்" பாடலை பாடி மகிழ்வித்தனர். ஐயப்பன் முனியாண்டி பாடும் ஆர்வம் கொண்டவர். அதேநேரத்தில் வெட்கப்படாமல் ஆடவும் செய்தார். இவருக்கு முன்னாள் மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை புலப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மாறுபட்ட உணவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சீன உணவகத்தில் விதவிதமான உணவு வழங்கப்பட்டன. இந்நிகழ்வின இறுதியில் வந்திருந்த முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் பயணப் பெட்டி பரிசாக வழங்கப்பட்டது.

இந்த குடும்ப தின விழாவை பத்தாங் பெர்ஜுந்தை முன்னாள் மாணவர்களின் சார்பில் ரெங்கநாதன், நீலமேகன், ஐயப்பன் முனியாண்டி, முருகேசன், மதியழகன், அருள் ஆகியோர் ஏற்பாடு செய்தி்ருந்தனர். இதில் கலந்து கொண்ட சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்  ஆர்.சந்திரன், அக்னி கனகா இருவரும் இவர்களுடன் பத்தாங் பெர்ஜுந்தையில் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments