வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கும்பமேளாவிலும், 70ஆவது குடியரசு தினத்திலும் பங்கேற்கவே பிரவாசி மாநாடு இன்று நடைபெறுகிறது வரவேற்புரையில் வெளியுறவு அமைச்சர் செஷ்மா தகவல்

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கும்பமேளாவிலும், 70ஆவது குடியரசு தினத்திலும் பங்கேற்கவே பிரவாசி மாநாடு இன்று நடைபெறுகிறது
வரவேற்புரையில் வெளியுறவு அமைச்சர் 
செஷ்மா தகவல்

தேசம் செய்திகளுக்காக இந்தியா, வரணாசியில் இருந்து குணாளன் மணியம், மு.வ.கலைமணி

வரணாசி, ஜன. 22-
        வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கும்பமேளாவிலும், 70ஆவது குடியரசு தினத்திலும் பங்கேற்கவே பிரவாசி மாநாடு இன்று ஜனவரி 22இல்  நடைபெறுவதாக 
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா தமது வரவேற்புரையில் கூறினார்.

வரணாசியில் நடைபெறும் இந்த பிரவாசி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. காசியில் நடைபெறும் கும்பமேளா நீராடல் உங்களுக்கு இறைவனின் ஆசியைக் கொண்டு வரும் என்று சுஷ்மா தெரிவித்தார்.

இந்த சிறப்பு வாய்ந்த பிரவாசி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைவரையும் வரவேற்பதாகவும் கும்பமேளா, குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு இந்திய கலாச்சாரம், பண்பாட்டை உங்கள் நாடுகளுக்கு கொண்டு செல்லுங்கள் என்றார் சுஷ்மா.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் 15ஆவது புலம்பெயர்ந்த இந்தியர்களின் மாநாடு பரவாசி பாரதிய திவாஸ் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறகின்றது. இந்த மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

 ‘இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு என்ற கருபொருளுடன் நடைபெறும் இந்த பிரவாசி மாநாடு மகாத்மா காந்தி அடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்த நாளை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும்  நடைபெறுகிறது.


இந்திய வெளியுறவுத் துறை அமைச்சும், உத்திரப் பிரதேச மாநில அரசாங்கமும் இந்த மாநாட்டையும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments