பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் பிளாஸ்டிக் பொட்டலத்தில் அன்னதானமா? பத்துமலை அடிவாரத்தில் அனுமதியில்லை டான்ஸ்ரீ ஆர்.நடராஜா எச்சரிகை

பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் பிளாஸ்டிக் பொட்டலத்தில் அன்னதானமா?
பத்துமலை அடிவாரத்தில் அனுமதியில்லை  டான்ஸ்ரீ  ஆர்.நடராஜா எச்சரிகை

செய்தி:
குணாளன் மணியம்
படங்கள் : முகேஸ்வரன்

பத்துமலை, ஜன.13-
        பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் பேரா, சித்தியவான், மஞ்சோங்கில் உள்ள ஒரு ஆலய இயக்கம் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பொட்டலத்தில் அடைக்கப்பட்ட அன்னதானம் வழங்குவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா கூறினார்.

"எனக்கு பக்தர்கள் பாதுகாப்பு முக்கியம். அந்த இயக்கம் வழங்கும் அன்னதானத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவு பக்தர்களுக்கு ஆபத்து. அந்த உணவு பலமணி நேரம் அந்த பிளாஸ்டிக் பொட்டலத்தில் ஊறும் நிலையில் அதனை பக்தர்களுக்கு வழங்குவது சரியில்லை  என்று பத்துமலை  ஆலய அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டான்ஸ்ரீ நடராஜா அவ்வாறு தெரிவித்தார்.

சித்தியவான், மஞ்சோங்கில் இருந்து ஒரு ஆலய இயக்கம் நாளை ஜனவரி 13 ஞாயிற்றுக்கிழமை பத்துமலை அடிவாரத்தில் பிளாஸ்டிக் பொட்டலத்தில் அடைக்கப்பட்ட உணவை வழங்குவதாக அறிகிறோம்.
இதற்கு எங்கள் ஆலயத்தை சேர்ந்த சிலர் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. நான் இதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். பிளாஸ்டிக் பொட்டலத்தில் அடைக்கப்பட்ட உணவு சித்தியானில் இருந்து சமைத்து கொண்டு வரப்படுகிறது. பத்துமலை கொண்டு வரப்படும் அந்த உணவை சீக்கிரம் சமைக்க வேண்டும். பிறகு அதனை பிளாஸ்டிக் பொட்டலத்தில் போடுவார்கள். பத்துமலை கொண்டு வரப்படும் அந்த உணவு பல மணிநேரம் பிளாஸ்டிக் பொட்டலத்தில் ஊறி பக்தர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று  டான்ஸ்ரீ  ஆர்.நடராஜா சொன்னார்.

இவ்வாண்டு பத்துமலை தைப்பூசத் திருவிழா ஜனவரி 19 தொடங்கி 22 வரையில்  கொண்டாடப்படும் வேளையில் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம் பிளாஸ்டிக் பொட்டலங்களை ஆதரிக்கவில்லை. அது பக்தர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால் புற்றுநோய் ஏற்படுவதாகவும் சிலாங்கூர் மாநில அரசாங்கம்  பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றாக தடைவிதித்து விட்டதாகவும் டான்ஸ்ரீ நடராஜா சொன்னார்.

"நீங்கள் அன்னதானம் வழங்க வேண்டுமா? ஆலயத்தில் உள்ள உணவு மண்டபத்தில் சமைத்து வாழை இலையில் பரிமாறுங்கள். நான் இடம் வழங்குகிறேன். அதைவிடுத்து பிளாஸ்டிக் பொட்டலத்தை பயன்படுத்துங்கள். பிளாஸ்டிக் பொட்டலம் ஆபத்து என்று தெரிந்திருந்தும் ஏன் பயன்படுத்த வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா  கேள்வி எழுப்பினார்.

Comments