ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஒற்றுமை திருநாளாக பொங்கல் விழாவை கொண்டாடுவோம்! ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வாழ்த்து

ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஒற்றுமை திருநாளாக பொங்கல் விழாவை கொண்டாடுவோம்!
ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வாழ்த்து

கோலாலம்பூர், ஜன.14-
     ஒளிமயமான எதிர்காலத்திற்கு பொங்கல் திருநாளை ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு விழாவாக கொண்டாடுவோம் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் பொங்கல் வாழ்த்து செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொங்கல் விழா இந்தியர்களின் பாரம்பரிய விழா. இந்த திருநாளில் நாம் எதிர்கால நலன் கருதி ஒரே சமுதாயமாக ஒன்றுபடுவோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஆகையால், இத்திருநாளை  ஒற்றுமையோடு கொண்டாடி மகிழ்வோம் என்று
மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்  வலியுறுத்தினார்.

நாம் இந்நாட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வேளையில் நமது பாரம்பரியத்தை நாம் விட்டுக் கொடுக்காமல் ஒற்றுமையாக கொண்டாடி வருகிறோம். ஒற்றுமையே பலம் என்று சொல்வார்கள். அந்த வகையில் மூவின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் அரசியல், கல்வி, பொருளாதாரம், சமுதாயம் என்று அனைத்திலும்  பீடுநடை போட வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

இந்நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை முறியடிக்கக் கூடிய வல்லமையை நாம் பெற்றிருக்க வேண்டும். ஒரு தனி மனிதனின் பொருளாதார உயர்வானது ஒரு சமூகத்தின் உயர்வாகும். ஒரு சமூகத்தின் பொருளாதார உயர்வு ஒரு நாட்டின் பொருளாதார உயர்வாகும்.

மலேசிய மண்ணில் பிறந்த நாம் நாட்டிற்கு, சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் விசுவாசம் கொண்ட குடிமகனாக இருக்க வேண்டும்  வேண்டும். நாம் வாழ்க்கையில் தூரநோக்கு சிந்தனையுடையவர்ளாக இருக்க வேண்டும். இதன் வழி ஒரு பரிவுமிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று பொங்கல் வாழ்த்துச் செய்தியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Comments