பத்துமலை ஆற்றங்கரையை ஆழப்படுத்தும் பணிக்கு உதவினார் ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்ஹாம்! கோம்பாக் நாடாளுமன்ற இந்தியர் பிரிவு தலைவர் மணிவண்ணன் நன்றி!

பத்துமலை ஆற்றங்கரையை ஆழப்படுத்தும் பணிக்கு உதவினார் ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்ஹாம்!
கோம்பாக் நாடாளுமன்ற இந்தியர் பிரிவு தலைவர் மணிவண்ணன் நன்றி!

குணாளன் மணியம்
படங்கள்/காணொளி : முகேஸ்வரன்

பத்துமலை, ஜன.15-   
        தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஆற்றங்கரை யை ஆழமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோம்பாக் நாடாளுமன்ற இந்தியர் சமூகநல பிரிவு தலைவர் மணிவண்ணன் சிவலிங்கம் கூறினார்.பத்துமலை ஆற்றங்கரையை ஆழமாக்கவும் சுத்தமாக்கவும் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம் சுங்கை துவா சட்டமன்ற அலுவலகத்தில் கோரிக்கையை முன் வைத்திருந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்ஹாம் பார்வைக்கு கொண்டு சென்றோம். அவரது உதவியுன் வடிகால், நீர்பாசன துறையினர் ஆற்றங்கரை பகுதிக்கு நேரில் வருகை மேற்கொண்டு ஆற்றை ஆழப்படுத்தும் பணிகளையும் சுத்தம் செய்யும்  பணிகளையும் பார்வையிட்டதாக மணிவண்ணன் தெரிவித்தார்.இந்த பணிகள் ஒரிரு நாட்களில் முடிவடையும் என்றும் இந்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பத்துமலை அடிவாரத்தில் இருக்கும் ஆற்றங்கரை மற்றும் கொமியுட்டர் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஆற்றங்கரையை ஆழப்படுத்தும் பணியும், சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் என்றும் மணிவண்ணன் சொன்னார்.
இந்தப் பணிகளை மேற்கொள்ள உதவிய சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்ஹாம் அவர்களுக்கும் வடிகால் நீர்பாசன துறை அதிகாரிகளுக்கும் மணிவண்ணன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Comments