கலிடோனிய தோட்ட வீடமைப்பு திட்டம் ஈராண்டுகளில் நிறைவேறும்! மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி அறிவிப்பு

கலிடோனிய தோட்ட வீடமைப்பு திட்டம் ஈராண்டுகளில் நிறைவேறும்!
மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி அறிவிப்பு

மு.வ.கலைமணி

நிபோங் திபால், ஜன.14.
      நிபோங் திபால்  வட்டாரத்தில் பழமையான  குடியிருப்புகளை கொண்ட கலிடோனியா தோட்டம் இன்னும் இரு ஆண்டுகளில் புதிய வீடமைப்பு பகுதியாக தரம் உயர்த்தப்படும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி  தெரிவித்தார்.பினாங்கு மேம்பாட்டு நிறுவனத்தின் மேற்பார்வையில் எகோ வொல்ட் வீடமைப்பு நிறுவனம் இந்த திட்டத்தை நிறைவேற்றும் என்ற அவர் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் சரிவர செயல்படுத்த இயலாது போனதால் இப்போது இத்திட்டத்தை எகோ வோல்ட் நிறுவனத்திடம் பொறுப்புகள் வழங்கி அதனை முழுமையாக செயல்படுத்தி இரு ஆண்டுகளில் இத்திட்டத்தை நிறைவேற்றிட முனைந்துள்ளோம் என்ற அவர் ஆலயம் மற்றும் மண்டபம் புதிய தோற்றத்தில் அவ்விடத்திலேயே  நிலைநிறுத்தப்படும் என்றார்.
எகோ வொல்ட் வீடமைப்பு நிறுவனத்தின் செயல்முறை அதிகாரி டத்தோ சுந்தரராஜு பெசுகையில்,  துணை முதல்வரின் அளப்பரிய பங்கு இந்த திட்டத்தில் மேலோங்கி நிற்கின்றது. அவரின் தீவிர முயற்சியின் பயனாக இத்திட்டம் மீண்டும் தொடக்கப்பட்டு, ஆக்ககரமாக செயல்வடிவம் பெறுகின்றது. அவருக்கு இத்தோட்ட மக்கள் என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டவராவர் என புகழ் மாலை சூட்டினார்.


ADVERTISEMENT

 ADVERTISEMENT


நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மன்சோர் ஒஸ்மான், ஜாவி சட்டமன்ற உறுப்பினர் இங் மூய் லாய், சுங்கை பக்காப் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்  அமார் பிரிதிபால், மற்றும் ஆலயம், பொது இயக்கங்களின் தலைவர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

இதனிடையே, நிபோங் திபால் வட்டாரத்தில் நன்கு அறிமுகமான   பொது நல சேவையாளரும், கலிடோனியா தோட்ட நிலக் குழு தலைவருமான க.சே.தியாகராஜன் கூறுகையில் சுமார் 30 ஆண்டு காலம்  இழுபறியாக இருந்து வந்துள்ள இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வெற்றிப்பெற ஆவண செய்திருக்கும் துணை முதல்வர் அவர்களுக்கு என்றுமே இத்தோட்ட மக்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம் என உள்ளன்போடு கூறினார்.

Comments