ரவாங் தாமான் காரிங்கில் மக்கள் பொங்கல் விழா! தமிழர் திருநாளான பொங்கல் விழாவை மக்கள் பெருவிழாவாக தொடர்ந்து கொண்டாட வேண்டும்! ஏற்பாட்டாளர் கிருஷ்ணன் சங்கரன் வலியுறுத்து

ரவாங் தாமான் காரிங்கில் மக்கள் பொங்கல் விழா!
தமிழர் திருநாளான பொங்கல் விழாவை மக்கள் பெருவிழாவாக தொடர்ந்து கொண்டாட வேண்டும்!
ஏற்பாட்டாளர் கிருஷ்ணன் சங்கரன் வலியுறுத்து

செய்தி:
குணாளன் மணியம்
படங்கள்: ஹரிஸ்ரீநிவாஸ்

ரவாங், ஜன.18-
         தமிழர் திருநாளான பொங்கல் விழாவை மக்கள் பெருவிழாவாக தொடர்ந்து கொண்டாட வேண்டும் என்று கோலகாரிங்கில் நடைபெற்ற மக்கள் பொங்கல் விழா
ஏற்பாட்டாளர் கிருஷ்ணன் சங்கரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விழா பொங்கல் விழா. தமிழர் திருநாள் என்று கொண்டாடப்படும் தைப்பொங்கல் சூரியபகவானுக்கு நன்றி சொல்லும் ஒரு விழாவாகும்.

 இந்த பெருவிழா தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் தலைமையில் நடைபெற்ற மக்கள் பொங்கல் விழாவில் பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் செலாயாங் பிகேஆர் கிளையின் ஏஜேகே, ஏஎம்கே உறுப்பினருமான கிருஷ்ணன் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.

இந்த பொங்கல் விழா முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் மக்கள் பேராதரவு வழங்கியுள்ளனர்.


ADVERTISEMENT
 ADVERTISEMENT


இது முதல் நிகழ்ச்சி என்பதால் நன்கு திட்டமிட்டு செய்ய வேண்டியுள்ளது. இந்த பொங்கல் நிகழ்வு வெற்றி பெற சுவா வேய் கியாட், செலாயாங் நகராண்மைக்கழக உறுப்பினர் சரவணன், எண்ரிகோஸ் நிறுவனம் ஆகியோர் பேராதரவு வழங்கியுள்ளனர். இந்த வேளையில் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் கிருஷ்ணன்.


இந்த நிகழ்வில் 115 பேருக்கு பொங்கல் பானை,  பொருட்கள் வழங்கப்பட்டன. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். மக்கள் அனைவரும் குடும்பத்தோடு  மகிழ்ச்சியாக பொங்கல்  வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொங்கல் பொருட்களை வழங்கினோம். அவர்களும் மகிழ்ச்சியோடு பொங்கலை கொண்டாடினார்கள்.

இந்த மக்கள் பொங்கல் விழாவில் இந்திய பாரம்பரிய விளையாட்டான உறி அடித்தல், ஊசியில் நூல் கோர்த்தல் உள்ளிட்ட பல விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இதில் தாய்மார்கள், தந்தைமார்கள், இளைஞர்கள் என்று பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் உறியடிக்கும் போட்டியில் கலந்து கொண்டார். அவரோடு சீனர்களும் மலாய்க்காரர்களும் கலந்து கொண்டதாக கிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பேசிய ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட், இதுபோன்ற பொங்கல் விழா தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் மூவினம் வாழும் மலேசிய திருநாட்டில் இத்தகைய பொங்கல் விழா ஒற்றுமையை வலுப்படுத்தும் என்றார். இதில் பேசிய செலாயாங் நகராண்மைக்கழக உறுப்பினர் சரவணன் தமிழர் பாரம்பரியம் மறையாமல் இத்தகைய பொங்கல் விழா அவசியம் என்று கூறினார்.
இந்த விழாவில் 115 பேருக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கு உதவி செய்த சுவா வேய் கியாட், சரவணன், எண்ரிகோஸ், எஸ்.நாகரத்தினம், எஸ்.விக்னேஷ்வரன், எஸ்.அர்சுதன் ஆகியோருக்கு எஸ்.கிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கோல காரிங், தாமான் காரிங் வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டதாகவும் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக எஸ்.கிருஷ்ணன் குறிப்பிட்டார்.k

Comments