பத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஆற்றை ஆழப்படுத்தும் பணி நிறைவடைந்தது! சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்ஹாமுக்கு விவேகானந்தன் நன்றி

 பத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஆற்றை ஆழப்படுத்தும் பணி நிறைவடைந்தது!  சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்ஹாமுக்கு விவேகானந்தன் நன்றி


குணாளன் மணியம்
படங்கள்/காணொளி : முகேஸ்வரன்

பத்துமலை, ஜன.19-   
        தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஆற்றை ஆழமாக்கும் பணிகள் நிறைவடைந்ததாக ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான தகவல் பிரிவு பொறுப்பாளர் விவேகானந்தன் கூறினார்.


பத்துமலையில் தைப்பூசத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி தைப்பூசம் களைகட்டியது. இந்நிலையில் பத்துமலை அடிவாரத்தில் இருக்கும் ஆற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்ம துப்புறவு பணிகள் நிறைவடைந்தன.


 ஆற்றை ஆழப்படுத்தி குப்பைகளை அகற்ற உதவிய  சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்ஹாம் அவர்களுக்கும் வடிகால் நீர்பாசன துறை அதிகாரிகளுக்கும் இதனை விரைவாக செய்ய ஆட்சிக்குழு உறுப்பினரிடம் பேசிய கோம்பாக் நாடாளுமன்ற இந்திய சமூகநல பிரிவுத் தலைவர்  மணிவண்ணனுக்கும் விவேக் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


பத்துமலை ஆற்றங்கரையை ஆழமாக்கவும் சுத்தமாக்கவும் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம் சுங்கை துவா சட்டமன்ற அலுவலகத்தில் கோரிக்கையை முன் வைத்திருந்தது. எங்களின் கோரிக்கையை   சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்ஹாம் பார்வைக்கு கொண்டு சென்றார் மணிவண்ணன்.


ADVERTISEMENT
 ADVERTISEMENT


 அதன்படி வடிகால், நீர்பாசன துறையினர் ஆற்றங்கரை பகுதிக்கு நேரில் வருகை மேற்கொண்டு ஆற்றை ஆழப்படுத்தும் பணிகளையும் சுத்தம் செய்யும்  பணிகளையும் மேற்கொண்டதாக விவேக் தெரிவித்தார்.

Comments