வரணாசியில்(காசி) பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலைமையிலான ம.இ.கா பேராளர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

வரணாசியில்(காசி) பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு!
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலைமையிலான ம.இ.கா பேராளர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

தேசம் செய்திகளுக்காக இந்தியா, வரணாசியில் இருந்து குணாளன் மணியம்

 வரணாசி(காசி), ஜன.21-
        உத்திரப் பிரதேசம், வரணாசியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்  பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்து கொள்ள காசி வந்துள்ள மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவரும்  ம.இ.கா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்
தலைமையிலான ம.இ.கா பேராளர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு நல்கப்பட்டன.

புதுடில்லியில் இருந்து வரணாசி விமான நிலையம் வந்தடைந்த ம.இ.கா பேராளர்களை வரவேற்க விமான நி்லையம் வந்திருந்த பிரவாசி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் அனைத்து பேராளர்களுக்கு திலகமிட்டு,
மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு நல்கினர். இது பேராளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விமான நிலையத்தின் உள்புறமும்  வெளிபுறமும்  பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் பேராளர்களை வரவேற்கும் பதாதைகள்  ஆங்காங்கே காணப்பட்டன.
பேராளர்கள் தங்கு விடுதிக்கு சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட போது சாலையின் இருமருங்கிலும் போடப்பட்டிருந்த பிரவாசி பாரதிய
ADVERTISEMENT


 ADVERTISEMENT

பாரதிய திவாஸ் மாநாட்டு பதாதைகள் வரணாசி விழாக்கோலம் பூண்டுள்ளதை காண முடிந்தது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தி ஜனவரி 7ஆம் தேதி இந்தியா திரும்பியதை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்காக
நடத்தப்படும் பிரவாசி மாநாட்டில்  ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.
அந்த வகையில் ம.இ.கா சார்பில்  அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்
தலைமையில் 240  பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வரணாசியில் அணிதிரண்டுள்ளனர்.

 இந்த பிரவாசி மாநாட்டில் ம.இ.கா ஊடகவியலாளர்களையும் அழைத்துச் சென்றுள்ளது. இவர்கள்  செய்திகளை சேகரித்து தத்தம் ஊடக வாசகர்களுக்காக வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments