கேமரன் மலை இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி! ம.இ.கா அடுத்த பொதுத் தேர்தலில் இலக்கை அடையும்! ம.இ.கா தகவல் பிரிவு தலைவர் வே.குணாளன் கருத்து

கேமரன் மலை இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி!
ம.இ.கா அடுத்த பொதுத் தேர்தலில் இலக்கை அடையும்!
ம.இ.கா தகவல் பிரிவு தலைவர் வே.குணாளன் கருத்து

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜன.29-
        கேமரன் மலை இடைத்தேர்தலில்
தேசிய முன்னனி வெற்றி பெற்றுள்ளதானது அடுத்த இடைத்தேர்தலில் ம.இ.கா இலக்கை அடைய ஒரு பாலமாக அமைந்துள்ளது என்று ம.இ.கா தகவல் பிரிவு தலைவர் வே.குணாளன் கருத்து தெரிவித்துள்ளார்.

கேமரன் மலை இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி பெற்றுள்ளது ம.இ.காவிற்கு ஒரு திருப்புமுனையாகும். ம.இ.கா கேமரன் மலையை அம்னோவுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாக பலர் கருதுகின்றனர். தற்போதைய அரசியல் சூழலில் எடுக்கப்பட்ட முடிவு அது. ஆனால், அடுத்த பொதுத் தேர்தலில் ம.இ.கா தனது இலக்கை அடைவதற்கு இந்த வெற்றி ஒரு பாலமாக அமையும் என்று தேசம் வலைத்தளத்திடம் தொடர்பு கொண்ட வே.குணாளன் அவ்வாறு சொன்னார்.

ADVERTISEMENT
 ADVERTISEMENT

இந்த வெற்றியானது தேசிய முன்னனி மீதான மக்கள் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. நம்பிக்கை கூட்டணியின் 9 மாதகால ஆட்சியில் மக்கள் என்ன பலனடைந்தார்கள் என்பதற்கு கேமரன் மலை மக்கள் பதில் சொல்லி விட்டார்கள். இனி ம.இ.கா தனது இலக்கை நோக்கி பயணிக்கும் என்றார் ம.இ.கா சிப்பாங் தொகுதி தலைவருமான வே.குணாளன்.

தேசிய முன்னனி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சி குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சி குறித்து 100 பேரிடம் கருத்து கேட்டால் அவர்களில் 80 பேர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் நிலையில் இவர்களின் ஆட்சி அமைந்துள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிருப்தி அலையே கேமரன் மலையில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் தோல்விக்கு காரணம். இது போன்ற பல அதிருப்தி மக்கள் மத்தியில் நிலவியிள்ளது. ஆகையால், தேசிய முன்னனி அரசாங்கம்  மீண்டும் ஆட்சிக்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை. தேசிய முன்னனி செமினி இடைத்தேர்தலிலும் வெற்றிக் கொடியை நாட்டும்  என்று வே.குணாளன் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments