நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! கேமரன் மலை வெற்றியானது தேசிய முன்னனிக்கு ஒரு திருப்பு முனை! ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கருத்து

நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி!
கேமரன் மலை வெற்றியானது
தேசிய முன்னனிக்கு ஒரு திருப்பு முனை!
ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கருத்து

ஜி.முகேஸ்வரன்

கோலாலம்பூர், ஜன.27-
        கேமரன் மலையில்
தேசிய முன்னனி வெற்றி பெற்றுள்ளது ஒரு திருப்பு முனையாகும் என்று
ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியானது தேசிய முன்னனி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு அறிகுறியாகும். நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வரலாம் என்று வரணாசியில் நடைபெற்ற பிரவாசி மாநாட்டில்  கலந்து கொண்டு புதுடில்லியில் இருந்து கோலாலம்பூர் புறப்படும் போது புதுடில்லி விமான நிலையத்தில் அம்மாநாட்டில் கலந்து கொண்ட தேசம் வலைத்தளத்தின் தலைமை ஆசிரியர் குணாளன் மணியத்திற்கு வழங்கிய சிறப்பு பேட்டியில்  முன்னாள் துணையமைச்சருமான டத்தோ டி.முருகையா அவ்வானு கூறினார்.

கடந்ந பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதை யாரும் குறிப்பாக மக்கள் மறுக்க மாட்டார்கள்.

இந்த அதிருப்தி அலை கேமரன் மலையில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் வெற்றியை பறித்துள்ளது. இந்த நிலை தொடரலாம். தேசிய முன்னனி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று டத்தோ டி.முருகையா மேலும் சொன்னார்.

Comments