இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார் மொரிஷியஸ் பிரதமர் பிரவின் ஜெகநாத்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார் மொரிஷியஸ் பிரதமர் பிரவின் ஜெகநாத்

தேசம் செய்திகளுக்காக இந்தியா, வரணாசியில் இருந்து குணாளன் மணியம், மு.வ.கலைமணி

வரணாசி, ஜன.22-
       இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறமையானவர். புதிய இந்தியாவை உருவாக்குவதில் அவர் எடுத்துள்ள முயற்சி வெற்றி காணும் என்று மொரிஷியஸ் பிரதமர் பிரவின் ஜெகநாத் பாராட்டினார்.


" மோடி ஜி நீங்கள் திறமையானவர். உங்களின் நடவடிக்கைகள் சிந்திக்க வைக்கின்றன. எங்களை வியக்க வைக்கின்ற,உங்களின் முயற்சி கண்டிப்பாக வெற்றியளிக்கும்" என்றார் மொரிஷியஸ் பிரதமர் பிரவின் ஜெகநாத்.


இதில் மொரிஷியஸ்- இந்தியா ஆகிய இருநாடுகளின் நல்லிணக்கம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும். இந்தியா எங்களை கைவிட்டதில்லை. இந்த உறவு மேலும் வலுப்பெறும் என்று நம்புகிறேன்.

ADVERTISEMENT

 ADVERTISEMENT

அதேநேரத்தில் கும்பமேளா, குடியரசு தினத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கிய இந்தியாவிற்கு நன்றி மொரிஜியஸ் பிரதமர் பிரவின் ஜெகநாத் நன்றி தெரிவித்தார்.

Comments