பிரவாசி மாநாட்டில் செய்திகள் சேகரிக்க தேசம் குணாளன் மணியம், தமிழ்நேசன் எஸ்.எம்.சுந்தர், தயாளன் சண்முகம், மக்கள் ஓசை கு.தேவேந்திரன், செ.வே.முத்தமிழ்மன்னன், மலையாண்டி, தமிழ்மலர் பவளச் செல்வன் இந்தியா, வரணாசிக்கு பயணம்

பிரவாசி மாநாட்டில் செய்திகள் சேகரிக்க தேசம் குணாளன் மணியம், தமிழ்நேசன் எஸ்.எம்.சுந்தர், தயாளன் சண்முகம், மக்கள் ஓசை  கு.தேவேந்திரன், செ.வே.முத்தமிழ்மன்னன், மலையாண்டி, தமிழ்மலர் பவளச் செல்வன்   இந்தியா, வரணாசிக்கு பயணம்

ஜி.முகேஸ்வரன்

கோலாலம்பூர், ஜன.20-
          தென்னாப்பிரிக்காவுல் இருந்து இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தி ஜனவரி 7ஆம் தேதி இந்தியா திரும்பியதை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் புலம்பெயர்ந்த இந்தியர்களின் பிரவாசி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாநாடு குறித்த செய்திகளை சேகரித்து தத்தம் ஊடக வாசகர்களுக்கு வழங்க  தேசம் ஊடகத்தின் தோற்றுநர், தலைமையாசிரியர் குணாளன் மணியம், தமிழ்நேசன் புகைப்படக் கலைஞர் 
எஸ்.எம்.சுந்தர், துணை ஆசிரியர் தயாளன் சண்முகம்
, மக்கள் ஓசை  துணை ஆசிரியர்  கு.தேவேந்திரன்
, துணை ஆசிரியர் செ.வே.முத்தமிழ்மன்னன், புகைப்படக் கலைஞர் பி.மலையாண்டி,
தமிழ்மலர் புகைப்படக் கலைஞர் பவளச் செல்வன்
  ஆகியோர்  இந்தியா, வரவாணிக்கு இன்று  பயணமாகவிருக்கின்றனர்.

இந்திய உத்திரப் பிரதேசம் வரணாசியில் ஜனவரி 21 தொடங்கி 23ஆம் தேதி வரையில் வெளிநாட்டில்  புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான 15ஆவது பிரவாசி  பாரதிய திவாஸ் மாநாடு நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT
 ADVERTISEMENT

இந்த முறை உலக இந்துக்கள் கூடும் புனித நீராடும் கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது.

இந்த கும்பமேளா திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதுள்ள இந்துக்கள்  கலந்து கொண்டு புனித நீராடுகின்றனர். இந்த கும்பமேளாவை உலக மக்கள் காண வேண்டும் என்பதற்காகவே பிரவாசி மாநாடு இந்த முறை வரணாசியில் நடத்தப்படுகிறது.

இந்த பிரவாசி மாநாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
இம்மாநாட்டில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் இந்தியத்  தலைவர்களும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலைமையிலான ம.இ.கா பேராளர்களும் கோபியோ எனப்படும் புலம்பெயர்ந்த இந்திய அமைப்பின் அனைத்துலக தலைவர் செல்வா தலைமையிலான பேராளர்களும் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments