பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்து கொண்ட மலேசிய ம.இ.கா பேராளர்களுக்கு வரணாசியில் விருந்தோம்பல் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வழங்கிறார்

பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்து கொண்ட மலேசிய ம.இ.கா பேராளர்களுக்கு  வரணாசியில் விருந்தோம்பல்
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வழங்கிறார்

குணாளன் மணியம்

வரணாசி, ஜன.23-
      பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்து கொண்ட மலேசிய ம.இ.கா பேராளர்களுக்கு  வரணாசியில் விருந்தோம்பல் ஒன்று நடத்தப்படவிருக்கிறது.

இந்த விருந்தோம்பலை ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஷ்வரன் நடத்தவிருக்கிறார். டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலைமையில் முதல் முறையாக  ம.இகா பேராளர்கள் வரணாசியில் நடைபெற்று வரும் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மகிழ்ச்சியான சூழலில் பிரவாசி மாநாடு இன்று ஜனவரி 23ஆம் தேசியோடு முடிவடைகிறது. இதனை முன்னிட்டு இன்று இரவு 7.00 மணிக்கு வரணாசியில் உள்ள பிரபல கிரேப் , ஓயின் 5 நட்சத்திர தங்கு விடுதியில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் விருந்து நல்கவிருக்கிறார்.

இன்று பிரவாசி இறுதி மாநாட்டில்  கொள்ளும் பேராளர்கள் மாநாடு முடிந்தவுடன் நேரடியாக கிரேப் ஓயின் தங்கு விடுதிக்கு பஸ் மூலம் வர வேண்டும்.

ADVERTISEMENT
 ADVERTISEMENT

 இந்த விருந்து நிகழ்வில் ம.இ.கா பேராளர்கள் கலந்து கொள்ள வேண்டும். அதேநேரத்தில்  ஊடகவியலாளர்களும் இந்த விருந்து நிகழ்வில்  கலந்து கொள்ளும்படி டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டுள்ளதாக டத்தோ அசோஜன் தெரிவித்தார்.

Comments