மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பொங்கல் பானை விநியோக நிகழ்வு! பேரா மந்திரிபுசார் மகிழ்வு

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த  பொங்கல் பானை விநியோக நிகழ்வு!
பேரா மந்திரிபுசார் மகிழ்வு   

ஈப்போ, ஜன.13-
       மூவாயிரம் பானைகளுடன் பொங்கல் பொருட்களை விநியோகித்த எம்சிஐஎஸ் நிறுவனத்தின் நிகழ்வு மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்து  ஒரு வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

 மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்த  இந்நிகழ்வுக்கு வருகை தந்த மலேசிய சாதனையாளர் புத்தக நிறுவன அதிகாரிகள் அதற்கான சான்றிதழை  வழங்கினர்.                 

எம்சிஐஎஸ் பிரதான ஏற்பாட்டாளராகவும் டி.எச்.ராகா மனிதா மற்றும் பேரா தமிழர் சங்கம் துணை ஆதரவாளராகவும் கொண்டு பொங்கல் பானை,  பொங்கல், பொருட்களுடன் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு பேரா மந்திரிபுசார்                       தலைமையில் பேரா தாப்பாவில் நடைபெற்றது.
மூவாயிரம் பானைகளுடன் பொருட்களை விநியோகித்து ஒரு வரலாற்று சாதனையை எமசிஐஎஸ் நிறுவனம் நிகழ்த்தியது. மலேசிய சாதனையாளர் பெத்தகத்தில் இடம்பெற்ற பொங்கல் இந்நிகழ்வினை பாராட்டும் விதத்திலும் சிறப்பான இந்நிகழ்வை நடத்தியதன் மூலமும் இல்லந்தோறும் பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ ஊக்குவித்தமைக்காகவும் பேரா மந்திரி புசாரை பொன்னாடை, மாலை அணிவித்து பாராட்டினார் பேரா தமிழர் சங்க செயலாளர், சமூக ஆர்வலர் மக்கட்செல்வர் பி.கே.குமார். 

வரலாற்று சிறப்புமிகு இவ்விழாவில் உரையாற்றிய பேரா மந்திரி புசார் டத்தோஸ்ரீ அகமது பைசால் அஸ்மு தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுத் திருவிழா பொங்கல்விழாவாகும் என்றும்.அதனை மறவாமல் மகிழ்ந்து கொண்டாடுவதற்காக ஏற்பாட்டாளர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காக பிரதான ஏற்பாட்டாளரான எம்சிஐஸ், துணை ஆதரவாளர்களை வெகுவாகப் பாராட்டுவதாகவும் இத்தகைய நிகழ்வு அடுத்த ஆண்டும் நடத்தப்பட்டு மேலும் அதிகமான பானைகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்க தாம்  விருப்பம் கொண்டிருப்பதாக மந்திரிபுசார் தெரிவித்தார்.

இந்திய சமுதாயம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் அக்கறை காட்டவேண்டும் என்று மந்திரி பெசார் கேட்டுக் கொண்டார்.

இவ்வாண்டு மலேசியத் தமிழர்களுக்கு பேரா மந்திரிபுசார் வழங்கியுள்ள மகத்தான கெளரவம் பொங்கல் விழாவை மேலும் மெருகூட்டியுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் விழா 61 ஆண்டு காலத்தில் இல்லாத அளவில் மகத்தான ஆங்கீகாரத்தை பேரா மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அகமது பைசால் அஸ்மு ஏற்படுத்திதந்துள்ளார். 
தித்திக்கும் சர்க்கரை பொங்கலின் மகிழ்வினை இது இரட்டிப்பாக்கியுள்ளது.       மலேசியத் தமிழர்கள் சார்பாக பேரா மந்திரிபுசார் அவர்களுக்கு பேரா தமிழர் சங்கம் வாழ்த்துகளையும் நன்றியையும் பதிவு செய்வதாக அதன் தலைவர் க விஜயதாமரை  தெரிவித்தார்.

தமது வாழ்நாளில் மறக்கவியலாத திருநாளாக இவ்வாண்டு பொங்கல்விழா மாறியுள்ளதாகவும் மந்திரிபுசார் வேண்டுகோளை ஏற்று அனைவரும் இல்லங்களில் பொங்கலிடவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மகிழ்வுடன் வீடு திரும்பினர். இதில்                     கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. டிஎச்ஆர் ராகா வானொலி அறிவிப்பாளர்கள் பாடிமகிழ்வித்து மனங்குளிர அறிவிப்பு செய்தனர்.

Comments