மலேசிய சாதனை திரைப்படமான "தமனி" திரைப்பட படப்பிடிப்பு முடிவடைந்தது! உச்சக்கட்ட படப்பிடிப்பு நேற்று புதன்கிழமை கோலாலம்பூர் கேடிஎம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது

மலேசிய சாதனை திரைப்படமான
"தமனி" திரைப்பட படப்பிடிப்பு முடிவடைந்தது!
உச்சக்கட்ட படப்பிடிப்பு நேற்று புதன்கிழமை கோலாலம்பூர் கேடிஎம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜன.17-
          மலேசிய  திரைப்பட வரலாற்றில் முத்திரை பதிக்கவிருக்கும் "தமனி" திரைப்படத்தின்  படப்பிடிப்பு முடிவடைந்தது.
இதன் உச்சக்கட்ட படப்பிடிப்பு நேற்று ஜனவரி 16 புதன்கிழமை இரவு கோலாலம்பூர் கேடிஎம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் முக்கிய கதாபாத்திரமான தமனியும் அவரது தந்தை சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

"தமனி" படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை காண தேசம் வலைத்தள குழுவினர் நேற்று கேடிஎம் ரயில் நிலையத்திற்கு நேரில் சென்றனர். அப்போது படப்பிடிப்பு குழுவினர் பம்பரமாக சுழன்று படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்ததை காண முடிந்தது. "தமனி" படப்பிடிப்பு இரவு 9.00 மணிக்குதான் நடக்க வேண்டியிருந்தது. ஆனால், திரைப்படக் குழுவினர் இரவு 7.00 மணிக்கெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் தயார் நிலையில் இருந்தது அவர்களின் ஆர்வத்தை எடுத்துக் காட்டியது.

"தமனி" படப்பிடிப்பு தளத்தில் இருந்த இதன் தயாரிப்பாளர்கள் டாக்டர் எஸ்.செல்வமுத்து, பாரதிராஜா இருவரும் திரைப்படக் காட்சிகள் குறித்து விளக்கியதோடு சில தகவல்களையும் தேசம் வலைத்தளத்திடம் பகிர்ந்து கொண்டனர். "தமனி" திரைப்படம் மலேசிய திரைப்பட வரலாற்றில் முத்திரை பதிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த பாரதிராஜா, படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒப்பனை கலைஞர், லைட் கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்ததோடு அவர்களின் திறமைகளையும் எடுத்துரைத்தார்.
நமது நாட்டில் இருக்கும் ஆற்றல்மிக்க கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற எண்ணம் பாரதிராஜாவிடம் மோலோங்கி இருந்தது.

"தமனி" படப்பிடிப்பு தளத்தில் இருந்த தயாரிப்பாளர் டாக்டர் எஸ்.செல்வகுமாரும் நம்மோடு பேசினார். " "தமனி"யில்  அவரும்  முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அது "சஸ்பென்ஸ்" என்றார் படத்தின் இயக்குநர் மதன். படப்பிடிப்பு தளத்தில் இருந்த கலைஞர் டேவிட்டும் நம்மை வரவேற்றார்.

மலேசிய திரைப்பட தயாரிப்பில் முத்திரை பதித்து வரும் டாக்டர் எஸ்.செல்வகுமார், பாரதிராஜா தயாரிப்பில் 2019ஆம் ஆண்டின் மிகப்பெரிய படமான "தமனி" திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2  தொடங்கியது.
இதுவொரு "புளோக்பாஸ்டர்" திரைப்படம் என்பதால் மலேசிய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. "தமனி" பெயரைக் கேட்டவுடன் ஏதோ ஒரு சினிமா திரைப்படத்தின் பெயர் போல அமைந்துள்ளது. "தமனி" என்ற ஒரு இளம் பெண்ணின் கதை இதுவாகும். இதில் ஈஸ்வர், தேவா, டேவிட் உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்துள்ளனர்.
"லவ் இன் 12 ஹவர்ஸ்" திரைப்படத்தில் நடித்த கலைஞர்கள், திரைபடக்குழுவினர் முழுக்க முழுக்க தமனியில்  பணியாற்றியுள்ளனர்.

"தமனி" இரண்டு மணி நேரத்திற்கு குறைவான நேரத்தை கொண்ட திரைப்படமாகும்.சுமார் ஐந்து லட்சம் வெள்ளி செலவில் தயாரிக்கப்பட்டு வரும் "தமனி" திரைப படம் பத்துகேவ்ஸ், ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, அம்பாங் ஆகிய இடங்களின் சுற்று வட்டாரத்தில் 15 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெற்று நேற்று ஜனவரி 16 புதன்கிழமை முடிவடைந்தது.

மலேசிய வரலாற்றில் மிகப்பெரிய படமாக கருதப்படும் "தமனி"யை மதன் இயக்கியுள்ளார். இப்படத்தை டாக்டர் செல்வமுத்து, பாரதிராஜா தயாரித்துள்ளன்னர். 2019ஆம் ஆண்டு திரையேறத் திட்டமிடப்பட்டுள்ள "தமனி" மலேசிய ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம். தமனி வெற்றி பெற "தேசம்" வாழ்த்துகிறது.

Comments