"பேட்ட" திரைப்படத்திற்கு உலக உரிமம் பெற்றுள்ள மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் பொங்கலுக்கு அதனை திரையேற்றும்! சூப்பர் ஸ்டார் ரஜினி வருகையை எதிர்பார்த்து மலேசிய ரசிகர்கள்

"பேட்ட" திரைப்படத்திற்கு உலக உரிமம் பெற்றுள்ள மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் பொங்கலுக்கு அதனை திரையேற்றும்!
சூப்பர் ஸ்டார் ரஜினி வருகையை எதிர்பார்த்து மலேசிய ரசிகர்கள்

குணாளன் மணியம்


கோலாலம்பூர், ஜன.1-
           சூப்பர் ஸ்டார் ரஜினியின் "பேட்ட" திரைப்படத்திற்கு உலக உரிமம்  பெற்றுள்ள மாலிக் ஸ்டிரீம்ஸ் இப்படத்தை உலகலவில் வரும் பொங்கலில் ஏககாலத்தில் திரையேற்ற தயாராகி வரும் வேளையில் மலேசிய ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் மலேசிய வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

"பேட்ட" திரைப்படம் திரையேறும் நாளுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் "பேட்ட" திரைப்படத்தின் சிறப்புக் காட்சி மற்றும் அறிமுக விழா விரைவில் நடைபெறவிருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள டத்தோ அப்துல் மாலிக் நேரடி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த அறிமுக விழா மற்றும் சிறப்புக் காட்சி நிகழ்வில் "பேட்ட" திரைப்பட நடிகர் பட்டாளம் கலந்து கொள்ளவிருக்கிறது. அதேநேரத்தில் முக்கியப் பிரமுகர்களும் இதில் கலந்து கொள்ளவிருப்பதாக தெரியவந்துள்ளது. "கபாலி" திரைப்படத்தின் வழி மலேசியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள  ரஜினிகாந்த் டத்தோ அப்துல்  மாலிக்குடன் நல்ல நட்பு கொண்டு வருகிறார்.

கபாலியில்  தொடங்கிய ரஜினி-மாலிக் நட்பு இன்றளவும்  தொடர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் சூப்பர் ஸ்டார் "பேட்ட" திரைப்பட அறிமுக விழா மற்றும் சிறப்பு காட்சியில் கலந்து கொள்ள வருவார் என்று மலேசிய ரசிகர்கள் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

"கபாலி" திரைப்படம் மலேசியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து 60 நாட்கள் வரை  நடைபெற்றது. இதில் மலேசியக் கலைஞர்கள் சிலரும் நடித்துள்ளனர். மலாய் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள கபாலி மலேசியா-இந்தியா ஆகிய இருநாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியிள்ளது. ரஜினி என்றால் மலாய்க்காரர்கள், சீனர்களும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு "கபாலி" முக்கியத் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments