தைப்பூச நாளில் கபட நாடகம் ஆடும் ராமசாமியின் கனவு பலிக்காது! மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஞானசேகரன் சாடல்

தைப்பூச நாளில்  கபட நாடகம் ஆடும் ராமசாமியின் கனவு பலிக்காது!
மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஞானசேகரன் சாடல்

மு.வ.கலைமணி

பினாங்கு, ஜன,19-
       தைப்பூச நாளில்  கபட நாடகம் ஆடும் ராமசாமியின் கனவு ஒரு போதும் பலிக்காது என்று மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஞானசேகரன் சாடியுள்ளார்.

 ம.இ.கா உறுப்பினர்களில் சிலர் ஏதோ சலுகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாநில அரசை நாடியபோது, வாய்ப்பு வழங்குவதாக கூறி, அவர்களை தம் கட்சியில் சேர வைத்துக் கொண்ட பேராசிரியர் ராமசாமயின் அரசியல் நாடகம் ஒரு போதும் நிறைவேறாது. அதேநேரத்தில்  நம்பிக்கையோடு ராமசாமியிடம் இணைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் கூறிக்கொள்கிறேன். ம.இ.காவில் உறுப்பியம் பெற்று இது நாள் வரை ம.இ.காவிற்கும் தேசிய முன்னணிக்கும்
உழைத்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டத்தோ மு.ஞானசேகரன் சொன்னார்.
.

ADVERTISEMENT
 ADVERTISEMENT


இந்த  சிறுபான்மையினரை வளைத்து போட்டு விட்டதற்காக பெருமிதம் கொள்ளும் மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கு இது ஒரு வெற்றியல்ல.
மாநிலத்தில் உள்ள உங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கே இதுவரையில் ஒன்றுமே செய்யாதிருக்கும் நீங்கள் மற்ற இந்தியர்களுக்காவது ஏதாவது செய்ய முன்வருவீர்களா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் சொந்தக் கட்சியில் இதுவரையில் ஒரு முறை கூட வெற்றிப் பெற்று பதவியை அலங்கரிக்க இயலாத ஒருவர், இப்படி   குறுக்கு வழியில் மற்றக் கட்சிக்காரர்களை சேர்ப்பது வேடிக்கையிலும் வேடிக்கைத்தனம் என்றார்.

இது ஒரு கபட நாடகம்.
ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்ற கதையாகதான் இது இருக்கிறது. அது என்ன,
வருடா வருடம் தைப்பூச விழாவில் மட்டும் இப்படி ஒரு பாம்பு வித்தை.
மகுடியை ஓதிவிட்டு ஆடு பாம்பே நீ விளையாடு பாம்பே என்று ஆடுவது ஏன் என்று டத்தோ ஞானசேகரன்  வினவினார்.

இதுவரையில் ம.இ.காகாரர்களை வாய்க்கு வந்தப்படி வசைப்பாடி திட்டி தீர்த்த துணை முதல்வர் என்ற ஒரு உயரிய அந்தஸ்தில் உள்ளவர், இப்போது மட்டும் அந்த ம.இ.காகாரர்களை சேர்க்க துடிப்பது கேவலமான செயல் அல்லவா எஅன்று அவர் சாடினார்.

எல்லா ம.இ.கா உறுப்பினர்களையும் சேர்த்து விடலாம் என்று கனவு காண வேண்டாம் ,
கொள்கையும் லட்சியமும் கொண்ட உறுப்பினர்கள் இன்னும் ஆயிரமாயிரம் பேர்  எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என அவர் நினைவுறுத்தினார்.

எனினும் முன்னாள் ம.இ.கா உறுப்பினர்கள் எனும் முத்திரைக்குள்ளான அந்த சில உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ ஞானசேகரன் குறிப்பிட்டார்.

Comments