தெய்வீக வாழ்க்கை சங்கம் வசதி குறைந்த மாணவர்களுக்கு தொடர்ந்து அடிப்படை கணினி, இணைய பயிற்சி வழங்கும்! தோற்றுநர் டத்தோ வி.சிவபரஞ்சோதி தகவல்

தெய்வீக வாழ்க்கை சங்கம் வசதி குறைந்த மாணவர்களுக்கு தொடர்ந்து அடிப்படை கணினி, இணைய பயிற்சி வழங்கும்!
தோற்றுநர் டத்தோ வி.சிவபரஞ்சோதி தகவல்

குணாளன் மணியம்

பத்துகேவ்ஸ், ஜன.7-
          தெய்வீக வாழ்க்கை சங்கம் வசதி குறைந்த மாணவர்களுக்கு அடிப்படை கணினி, இணைய பயிற்சியை தொடர்ந்து  வழங்கும் என்று சங்கத்தில் கணினி கல்வியை தோற்றுவித்த அதன் தோற்றுநர் டத்தோ வி.சிவபரஞ்சோதி கூறினார்.

கடந்த 2001ஆம் ஆண்டில் தெய்வீக வாழ்க்கை சங்கத்தில் கணினி அறிவியல் கல்வியை தோற்றுவித்தோம். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 3 மாத அடிப்படை கணினி பயிற்சியை முடித்துள்ளதாக 59 மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது டத்தோ சிவபரஞ்சோதி செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.

இந்த நவீன காலத்தில் கணினி, இணைய தேவைகள் முக்கியமான ஒன்றாகி  விட்டது. கணினி வகுப்புகள் கோலாலம்பூரில் மட்டுமே நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக பத்துமலை, கெப்போங் வட்டாரத்தில் இருக்கும் மாணவர்கள் அடிப்படை கணினி கல்வியை மேற்கொள்வதற்கு ஏதுவாக பத்துமலை தெய்வீக வாழ்க்கை சங்கத்தில் அறிவியல் கணினி துறையில் 3 மாதகால அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது.இந்த பயிற்சி வகுப்புகள் 2001   இன்றுவரையில் ஆயிரம் மாணவர்கள் பயிற்சியை முடித்துள்ளதாக டத்தோ சிவபரஞ்சோதி சொன்னார்.

இந்திய மாணவர்கள் கணினி, இணைய கல்வி கற்றுக் கொள்வதன் மூலம் கணினி குறித்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த நவீன காலகட்டத்தில் கணினி,  இணைய சேவைகள் இன்றியமையாத ஒன்றாக இருப்பதால் 150 வெள்ளிக்கு கணினி, இணைய கல்வியை வழங்குகிறோம். இதில் வசதி குறைந்த ஏழை மாணவர்களுக்கு  கணினி, இணைய கல்விக்கான 150 வெள்ளி கட்டணத்தை தெய்வீக வாழ்க்கை  சங்கம் வழங்குவதாக டத்தோ சிவபரஞ்சோதி குறிப்பிட்டார்.

மாணவர்களின் கல்விக்கு கணினி முக்கியப் பங்காற்றி வருகிறது. ஏனெனில் எல்லா பள்ளிகளில் கணினி, இணைய சேவைகள் அத்தியாவசிய தேவையாகி விட்டது. ஆகையால், தெய்வீக வாழ்க்கை சங்கம் கணினி கல்வியை  தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கும் என்றார் டத்தோ சிவபரஞ்சோதி.

இந்நிகழ்வில் 59 மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதில் தெய்வீக வாழ்க்கை சங்கத்தின் தலைவர் ஸ்ரீ சுவாமி சுவாயம் ஜெயாநந்த சரஸ்வதி மகாராஜ், மைநாடி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜெய்யேந்திரன், மாணவர்கள், பெற்றோர்கள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Comments