கேமரன் மலை இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி அவசியம்! வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் ம.இ.கா தகவல் பிரிவு தலைவர் வே.குணாளன் வலியுறுத்து

 கேமரன் மலை இடைத்தேர்தலில் தேசிய முன்னனி வெற்றி அவசியம்!
வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்
ம.இ.கா தகவல் பிரிவு தலைவர் வே.குணாளன் வலியுறுத்து

கேமரன் மலை, ஜன.13- கேமரன் மலை இடைத்தேர்தலில் மஇகாவிற்கு பதிலாக தேசிய முன்னனி வேட்பாளர் ஒருவரை களம் இறங்கியதற்கு தேசிய முன்னனி வெற்றியை உறுதி செய்யவே என்பதால் அதன் வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று ம.இ.கா தகவல் பிரிவுத் தலைவர் வே.குணாளன் வலியுறுத்தியுள்ளார்.

கேமரன் மலை மக்கள் இன்னமும் தேசிய முன்னனிக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதற்கு கடந்த 14ஆவது பொதுத்தேர்தல் ஒரு சான்று. இதில் பகாங் மாநிலம் இன்னமும் தேசிய முன்னனி கைவசம் இருப்பதை வாக்காளர்கள் உணர வேண்டும் என்று சிப்பாங் ம.இ.கா தொகுதித் தலைவருமான வே.குணாளன் தெரிவித்தார்.

கேமரன்மலை இடைத்தேர்தலில் மஇகாவிற்கு பதிலாக தேசிய முன்னனி வேட்பாளரை களம் இறங்கியதற்கு தேசிய முன்னனி வெற்றியை உறுதி செய்யவே தவிர அந்த நாடாளுமன்றத் தொகுதியை தாரைவார்த்துக் கொடுக்கவில்லை.  அத்தொகுதியை தேசிய முன்னனி இரவல் வாங்கியிருக்கிறது.  ம.இ.கா எதிர்காலத்தில் அதனை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றார் வே.குணாளன்.

கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னனி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதுதான் ம.இ.காவின் தற்போதைய இலக்காகும்.
மஇகாவின் மத்திய செயற்குழுவில் உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் எடுக்கப்பட  இந்த  முடிவு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் ம.இ.காவின்  எதிர்கால நலன் கருதி கால சூழலுக்கு ஏற்ப சில முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்று வே.குணாளன் தெளிவுபடுத்தினார்.

ஆகையால், கேமரன் மலை வாக்காளர்கள் குறிப்பாக இந்திய வாக்காளர்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தற்போதைக்கு நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் தேசிய முன்னனி அரசாங்கம் அடுத்த தேர்தலில் ஆட்சி அமைக்கலாம் என்பதை உணர்ந்து வாக்காளர்கள் தேசிய முன்னனி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வே.குணாளன் கேட்டுக் கொண்டார்.

Comments