தூரநோக்கு சிந்தனையில் தமிழர் திருநாளாக பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்! உலு சிலாங்கூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் என்.எம். ஸ்ரீவிக்னேஷ்வரன் வாழ்த்து

தூரநோக்கு சிந்தனையில் தமிழர் திருநாளாக பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்!
உலு சிலாங்கூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் என்.எம். ஸ்ரீவிக்னேஷ்வரன் வாழ்த்து

கோலாலம்பூர், ஜன.15-
    தூரநோக்கு சிந்தனையில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவை ஒற்றுமை திருநாளாக கொண்டாடுவோம் என்று உலு சிலாங்கூர் ஊராட்சி மன்றத் உறுப்பினர்  என்.எம். ஸ்ரீவிக்னேஷ்வரன் தமது பொங்கல் வாழ்த்து செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவை எதிர்கால நலன் கருதி தூரநோக்கு சிந்தனையில்  கொண்டாடுவோம். நாம் அனைவரும் ஒரே சமுதாயமாக ஒன்றுபட்டு இத்திருநாளை  ஒற்றுமையோடு கொண்டாடி மகிழ்வோம் என்று என்.எம் ஸ்ரீவிக்னேஷ்வரன்  கேட்டுக் கொண்டார்.

இந்நாட்டில் நாம் மூவின தக்களோடு பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். நாம் நமது பாரம்பரியத்தை இன்றளவும் விட்டுக் கொடுக்காமல் ஒற்றுமையாக கொண்டாடி வருவதே ஒரு சிறப்பாகும். இதுவே நமது பலத்தை நிரூபித்துள்ளது.

நமது சமுதாயம் அரசியல், கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில்  வெற்றி பெற்ற சமுதாயமாக  பீடுநடை போட  ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று  ஸ்ரீவிக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

இந்நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை சமாளிக்கும்  வல்லமையை நாம் பெற்றிருக்க வேண்டும். ஒரு தனி மனிதனின் பொருளாதார உயர்வானது ஒரு சமூகத்தின் உயர்வாகும். ஒரு சமூகத்தின் பொருளாதார உயர்வு ஒரு நாட்டின் பொருளாதார உயர்வாகும்.

நாம் வாழ்க்கையில் தூரநோக்கு சிந்தனையுடையவர்ளாக இருந்தால் மட்டுமே முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிக்க முடியும். ஆகையால் இந்த தைப்பொங்கல் நன்னாளில் அனைவரும் சீரிய சிந்தனையோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட என்.எம்.ஸ்ரீவிக்னேஸ்வரன் அனைவருக்கும் தமது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments