மலேசிய திரைப்பட வரலாற்றில் முத்திரை பதிக்க புறப்பட்டுள்ளது "யாழ்"! தேர்வு செய்யப்பட்டுள்ள திரையரங்குகளில் அறிமுக வீடியோ காட்சிகள் கலக்கி வருகிறது!

மலேசிய திரைப்பட வரலாற்றில் முத்திரை பதிக்க புறப்பட்டுள்ளது "யாழ்"!
தேர்வு செய்யப்பட்டுள்ள திரையரங்குகளில் அறிமுக வீடியோ காட்சிகள் கலக்கி வருகிறது!

குணாளன் மணியம் 

கோலாலம்பூர், ஜன.3-
           மலேசிய திரைப்பட வரலாற்றில் எல்லா திரைப்படங்களும்  முத்திரை பதிப்பதில்லை. எனினும் கடந்த காலங்களை காட்டிலும் தி்ரைப்படத் துறை மேம்பாடு கண்டுள்ளது.

அந்த வகையில் மலேசிய திரைப்பட வரலாற்றில்  "யாழ்"! திரைப்படம் முத்திரை பதிக்க புறப்பட்டுள்ளது. மலேசியாவில் யாங் பிரதர்ஸ் புரோடாக்‌ஷன்ஸ் பட நிறுவனம்திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
 இதன் உரிமையாளர்கள் ஹெலன் மற்றும் நாகா. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த  "தொடுவானம் தூரமில்லை" திரைப்படம் கனடா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் யாங் பிரதர்ஸ் புரோடாக்‌ஷன்ஸ், விகடகவி புரோடாக்‌ஷன்ஸ் இணைந்து "யாழ்"  திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தை ஹெலன் இயக்கிய லாவண்யா தயாரித்துள்ளார். இதில் மகேன் நாயகனாகவும் ஏஞ்சலா நாயகியாகவும் நடித்துள ளனர். இதில் மேலும் பலர் நடித்துள்ளனர்.


இந்த திரைப்படத்தை  இத்திரைப்படம் மலேசிய திரையரங்குகளில் விரைவில் திரையேறவுள்ளது. இந்நிலையில் "யாழ்" திரைப்படத்தின் அறிமுக வீடியோ காட்சி அண்மையில் வெளியீடு கண்டுள்ளது. இந்த வீடியோ தேர்வு செய்யப்பட்டுள்ள திரையரங்குகளில் கலக்கி வருகிறது.


மகேன் பிரதான நடிகரான நடித்து அசத்தியுள்ளார். யாழ் திரைப்படத்தில் மேலும் பல கலைஞர்கள் நடித்துள்ளனர். "யாழ்" மலேசிய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments