கேமரன் மலையில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு ம.இ.கா தேசிய தலைவரின் வியூகத்தன்மையும் உதவியது டத்தோ மு.ஞானசேகரன் பாராட்டு

கேமரன் மலையில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு ம.இ.கா தேசிய தலைவரின் வியூகத்தன்மையும் உதவியது
டத்தோ மு.ஞானசேகரன் பாராட்டு

மு.வ.கலைமணி

பினாங்கு, ஜன. 29.
கேமரன் மலையில் தேசிய முன்னணி பெற்ற மகத்தான வெற்றிக்கு பின்னால் ம.இ.காவின் பங்கு உள்ளடங்கியுள்ளது என பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ மு.ஞானசேகரன் கூறினார்.

கட்சித் தலைவரின்  வியூகம், தூர நோக்கு சிந்தனையின் மூலம் இந்த வெற்றி வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் பாராட்டினார்.

ADVERTISEMENT

 ADVERTISEMENT

அவரின் வியூக சிந்தனையை கட்சியின் மத்திய செயலவையின் முன் வைத்து,  ஒட்டு மொத்த தலைவர்களின் பேராதரவில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு பாடுபட்டு இந்த வெற்றியை பெற அவரின் தூர நோக்கு சிந்தனை உதவியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ம.இ.காவின் பாரம்பரிய தொகுதியான கேமரன் மலை, கைவிட்டு போய்விடவில்லை, மீண்டும் அடுத்த தேர்தலில் ம.இ.காவிற்கே அத்தொகுதி வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர் தேசிய முன்னணியின் வெற்றி ம.இ.காவின் வெற்றி எனவும் இது தேசிய முன்னணியின் அடுத்தக் கட்ட நகர்வுக்கான அஸ்திவாரம் என கூறினார்.

ம.இ.காவின் இப்படியொரு சாதகமான முடிவினால் இந்த வெற்றிக்கனியை தேசிய முன்னணி பறிக்க முடிந்தது என அவர் கூறினர்.

இந்த மாபெரும் வெற்றிக்கு தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவர்களுக்கு ஒட்டுப்பட்ட ம.இ.கா உறுப்பினர்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

Comments