பத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதான சாலைகள் மூடப்படும்! கோம்பாக் காவல் துறை அறிவிப்பு

பத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதான சாலைகள் மூடப்படும்!
கோம்பாக் காவல் துறை அறிவிப்பு

 செய்தி:
குணாளன் மணியம்
படங்கள் : முகேஸ்வரன்

பத்துமலை, ஜன.19-
        பத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பத்துமலை நோக்கி செல்லும் பல சாலைகள் ஜனவரி 19 தொடங்கி 22 வரையில்  கட்டம் கட்டமாக மூடப்படும் என்று கோம்பாக் காவல்துறை அறிவித்துள்ளது.

பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் 16 லட்சம் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள் என்பதால் சாலை போக்குவரத்து அவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது  என்பதற்காக பத்துமலை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்படும். பொதுமக்கள் முடிந்தவரை பொதுபோக்குவரத்தை பயன்படுத்துவது நல்லது என்று கோம்பாக் காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.


இவ்வாண்டு பத்துமலை தைப்பூசத் திருவிழா ஜனவரி 21 கொண்டாடப்படும் நிலையில் இச்சமயம் தொடர் விடுமுறையாக இருப்பதால் 16 லட்சம் பக்தர்கள் பதரதுமலைக்கு வந்த வண்ணம் இருப்பார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது.


ADVERTISEMENT
 ADVERTISEMENT


பத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிரதம் ஜனவரி 19 சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து பத்துமலை நோக்கி  புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற் பகல் 2.30 மணிக்கு பத்துமலை வந்தடையும் என்பதால் இச்சமயத்தில் பத்துமலை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் முழுமையாக மூடப்படும் என்று கோம்பாக் காவல்துறை கூறியுள்ளது.

இந்த ஆண்டு தைப்பூசத்திற்கு பக்தர்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.  பக்தர்கள் தங்கள் பிள்ளைகள், உடமைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும். தைப்பூசத் திருவிழாவின் போது நீண்ட விடுமுறையாக இருப்பதால் பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருக்கும் என்பதால் பக்தர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கோம்பாக் காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

.

Comments