இந்திய மக்களின் விசா சுமையை குறைக்க கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது! அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தகவல்

இந்திய மக்களின் விசா சுமையை குறைக்க கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது!
அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தகவல்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், பிப்.1-
          மலேசிய இந்திய மக்களின் விசா கட்டண சுமையைக் குறைக்க இந்தியாவுக்கு கடிதம் அனுப்ப ப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

தற்போதைய விசா கட்டணம் மிகவும் அதிகம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அதுவும் ஒரு வாரம் அல்லது இரு வாரம் மட்டுமே இந்தியா செல்லும் மக்களுக்கு இது நியாயமில்லை. இதுகுறித்து தொடர் முயற்சியை மேற்கொண்டு வருவதாக கோலாலம்பூரில் தமிழ் ஊடகவியலாளர்களுடான கலந்துரையாடலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.

இந்த விசா கட்டண விவகாரம் தொடர்பில் இந்திய  மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி குறித்து ஒரு கோரிக்கை மனுவை இந்திய தூதரகத்திடம் வழங்கியிருக்கிறேன். அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆனால், தங்களின் முயற்சி தொடரும் என்று பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

Comments