நான்கு இந்திய அமைச்சர்கள் வராததன் பின்னனி என்ன? பிரவாசி மாநாட்டிற்கு நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அங்கீகாரம் வழங்கவில்லை? பிரவாசிக்கு துன் சாமிவேலு அமைத்த அடித்தளம் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் காலத்திலும் ஆணிவேராக இருக்கிறது

நான்கு இந்திய அமைச்சர்கள் வராததன் பின்னனி என்ன?
பிரவாசி மாநாட்டிற்கு நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அங்கீகாரம் வழங்கவில்லை?
பிரவாசிக்கு துன் சாமிவேலு அமைத்த அடித்தளம் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் காலத்திலும் ஆணிவேராக இருக்கிறது

 இந்தியா, வரணாசியில் இருந்து குணாளன் மணியம்

வரணாசி, ஜன.23-தேசிய முன்னனி அரசாங்கம் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டிற்கு வழங்கிய அங்கீகாரத்தை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் வழங்க மறுத்ததன் விளைவாகவே இந்திய அமைச்சர்கள் பிரவாசி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்த பிரவாசி மாநாட்டில் நீர் வள, சுற்றுச்லசூழல்  அமைச்சர் சேவியர் ஜெயகுமார் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் சார்பில்  கலந்து கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், கடைசி நேரத்தில் அமைச்சரவை இந்த புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களுக்கான மாநாட்டிற்கு அங்கீகாரம் வழங்கவில்லை என்பதால் சேவியர் ஜெயகுமார் தலைமையிலான பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரம் ஒன்று தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தது.

கடந்த 2003 தொடங்கி நடத்தப்பட்டு வரும் பிரவாசி மாநாட்டிற்கு  தேசிய முன்னனி அரசாங்க ஆட்சியின் போது அமைச்சரவையில்  அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
அப்போதைய ம.இ.கா தலைவரும் அமைச்சருமான டத்தோஸ்ரீ (துன்) சாமிவேலு தலைமையில் அதிகமாக பேராளர்கள் கலந்து கொள்வார்கள். தேசிய முன்னனி அரசாங்கம் இம்மாநாட்டிற்கான செலவுகளை ஈடுகட்ட சிறப்பு மானியமும் வழங்கியிருந்தது.

ADVERTISEMENT
 ADVERTISEMENT

இந்த பிரவாசி பயணம் டத்தோஸ்ரீ பழனிவேல்,  டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் காலத்திலும் தொடர்ந்துதது.

ம.இ.காவின் தற்போதைய தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் இந்த வழக்கத்தை தொடர்கிறார். பிரவாசி 2019 மாநாட்டில் 240 ம.இ.கா பேராளர்களை தமது தலைமையில் அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பிரவாசி மாநாட்டை புறக்கணித்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேசிய முன்னனி ஆட்சியில் இல்லா விட்டாலும் ம.இ.கா கரம் ஓங்கியுள்ளதை இந்த 2019 பிரவாசி மாநாடு நிரூபித்துள்ளது. பிரவாசி மாநாட்டில் துன் சாமிவேலு அமைத்தால் அடித்தளம்  டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தலைமைத்துவத்திலும் ஆணிவேராக  நிலையில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள், ஒரு துணையமைச்சர் இருந்தும் அவர்கள் மௌன சாமியாராக இருப்பது பல்வேறு கேள்விகளை தொடுத்துள்ளது.

எதிர்கட்சியாக இருந்த போது பல விவகாரங்களில் குறிப்பாக இந்தியர் சார்ந்த விவகாரங்களில் துள்ளிக் குதித்தவர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள்? பதில் சொல்வார்களா?

Comments