இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்

தேசம் செய்திகளுக்காக இந்தியா, வரணாசியில் இருந்து குணாளன் மணியம், மு.வ.கலைமணி

 வரணாசி(காசி), ஜன.22-
         இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை  அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டு மண்டபத்திற்கு இந்திய நேரப்படி காலை 10.00 மணிக்கு வந்தார்.
அவருக்கு கோலாகல வரவேற்பு நல்கப்பட்டது. இந்த  மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பேராளர்களை

வரவேற்று பேசிய மோடி அவரது உரையில் பல அம்சங்கள் குறித்து பேசினார்.( விரிவான செய்திகள் விரைவில்)

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தி ஜனவரி 7ஆம் தேதி இந்தியா திரும்பியதை

ADVERTISEMENT

 ADVERTISEMENT

குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் புலம்பெயர்ந்த இந்தியர்களின் பிரவாசி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்கின்றனர். உலகம் முழுவதும் இருந்து 34 நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பிரவாசி மாநாநாட்டில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் இந்தியத்  தலைவர்களும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலைமையிலான ம.இ.கா பேராளர்களும்
கோபியோ எனப்படும் புலம்பெயர்ந்த இந்திய அமைப்பின் அனைத்துலக தலைவர் செல்வா தலைமையிலான பேராளர்களும்
இம்மாநாடு குறித்த செய்திகளை சேகரித்து தத்தம் ஊடக வாசகர்களுக்கு வழங்க
ஊடகவியலாளர்களுமாக 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments