பத்தாங் பெர்ஜுந்தை முன்னாள் மாணவர்கள் இயக்கமாக செயல்பட தயாராகி வருகிறார்கள்! குடும்பதின விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஐயப்பன் முனியாண்டி தகவல்

பத்தாங் பெர்ஜுந்தை முன்னாள் மாணவர்கள் இயக்கமாக செயல்பட தயாராகி வருகிறார்கள்!
குடும்பதின விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஐயப்பன் முனியாண்டி தகவல்

குணாளன் மணியம்

கிள்ளான், ஜன.19-
     பத்தாங் பெர்ஜுந்தை முன்னாள் மாணவர்கள் இயக்கமாக செயல்பட தயாராகி வருவதாக
குடும்பதின விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஐயப்பன் முனியாண்டி கூறினார்.

கடந்த 48 ஆண்டுகள் தொடர்ந்து வரும் இந்த இணைபிரியா நட்புக்கு அடையாளமாக ஏழை மாணவர்களுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் உதவ ஒரு இயக்கமாக உருவெடுக்கும் என்று முன்னாள் மாணவர்கள் குடும்ப தின விழாவில்  ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளர்களில் ஒருவரான ஐயப்பன் முனியாண்டி தெரிவித்தார்.

பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளியில் 1971 இல் தொடங்கிய இந்த இணைபிரியா நட்பு 48 ஆண்டுகள் கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் மாபெரும் குடும்பதின விழாவை நடத்தி முடித்து விட்டோம். இந்நிலையில் அடுத்த கட்டமாக முன்னாள் மாணவர்களான நாங்கள் இயக்கமாக செயல்பட தயாராகி அதற்கான நடவடிக்கையில் இறங்கவிருப்பதாக ஐயப்பன் முனியாண்டி சொன்னார்.


எங்கள் நட்புக்கு அடையாளம் பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி. இதற்காகவே முன்னாள் மாணவர்கள் இயக்கத்தை பதிவு செய்து ஏழை மாணவர்களுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் உதவ தயாராகி விட்டதாக ஐயப்பன் முனியாண்டி குறிப்பிட்டார்.


இந்த 2019ஆம் ஆண்டு எங்கள் 48 ஆண்டு் நட்புக்கு குடும்பதின விழாவாக இலக்கணம் வகுத்துள்ளது. எங்கள் இதய வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த இந்த நிகழ்வை ஆண்டுதோறும் பயனளிக்கும் வகையில் செயல்படுத்தவே இயக்கம் தொடங்க திட்டமிடப்பட்டதாக ஐயப்பன் முனியாண்டி கூறினார்.


நட்புக்கு இலக்கணமான நண்பர்கள் இணைந்து
ஆண்டு தொடக்கத்தில் நடத்திய இந்த குடும்பதின விழா வெற்றிக்கு
ஏற்பாட்டுக் குழுத் தலைவர ரெங்கநாதன் சீரிய பணி, சரியான திட்டமிடல்,  பொறுப்பான,  விவேகமான
செயல்திட்டம் வெற்றியைத் தேடி தந்தது.


ADVERTISEMENT
 ADVERTISEMENT


இது தொடர வேண்டும். அதேநேரத்தில்
நீலமேகனின் நேர்த்தியான, நெறியான அறிவிப்புப் பணி, முருகேசனின் விவேகமிக்க நிதி நிர்வாகம், மதியின் மகத்துவமான முன்னேற்பாடுகள்,
அருளின் அருமையான ஆலோசனை வழிகாட்டல் என்று ஒவ்வொருவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

ஆகையால், நண்பர்களின்
ஒத்துழைப்புடன் இயக்கத்தை பதிவு செய்து செயலாற்ற தாங்கள் திட்டமிட்டுள்ளதாக ஐயப்பன் தெரிவித்தார்.

எங்கள் அருமை நண்பன்
ரெங்கா உதிர்த்த
 மூன்று வார்த்தைகள் நட்பின் ஆழத்தை எடுத்துரைத்தது. உயர்வு தாழ்வு  பார்க்காத
இந்த நட்பு ஜாதி- மதத்தை தூக்கிப் போட்டதால் 47 ஆண்டுகள் அல்ல ஏழெழு ஜென்மத்திற்கும் நிலைத்து நிற்கும் என்று  நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தினார் ஐயப்பன் முனியாண்டி.
இந்த குடும்ப தின விழா இனிதே நடைபெற உதவிய  அனைவருக்கும் ஐயப்பன் முனியாண்டி நன்றி கூறினார்.

Comments